Published : 14 Nov 2019 03:34 PM
Last Updated : 14 Nov 2019 03:34 PM
நவம்பர் 21ம் தேதி பிரிஸ்பன் கப்பா மைதானத்தில் தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்க வீரர்கள் பர்ன்ஸ், பேங்க்ராப்ட் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
14 வீரர்கள் கொண்ட அணியில் டேவிட் வார்னர் தன் இடத்தைத் தக்கவைத்துள்ளார். வார்னருடன் பர்ன்ஸ் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ராவிஸ் ஹெட் அணியில் இருக்கிறார்.
ஆஷஸ் தொடரின் போது பர்ன்சுக்கு வைரல் காய்ச்சல் முடிந்து ஓய்வு அளிக்கப்பட்டிருந்ததால் தேர்வு செய்யப்படவில்லை. நேற்று முடிந்த பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பர்ன்ஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 0 மற்றும் 11 ரன்கள் எடுத்த போதும் எப்படி அணிக்குள் தேர்வு செய்யப்பட்டார் என்பது புதிராக உள்ளது.
மொத்தம் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சு இடத்துக்கு 3 வீரர்களைத் தேர்வு செய்து வைத்துள்ளனர். மைக்கேல் நெசர் என்ற வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாட் கமின்ஸ், ஸ்டார்க், பேட்டின்சன், நெசர், ஹேசில்வுட் என்று 14 வீரர்களில் 5 வேகப்பந்து வீச்சாளர்களில் ஆஷஸ் சிறந்த வீச்சாளர்களான பாட் கமின்ஸ், ஹேசில்வுட்தான் ஆட வாய்ப்புள்ளது, நேதன் லயன் நிச்சயம் உண்டு. இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சு இடத்துக்காக ஸ்டார்க், நெசர், பேட்டின்சன் ஆகிய 3 பேர்களைத் தேர்வு செய்துள்ளனர்.
உஸ்மான் கவாஜாவை உட்கார வைத்து மீண்டும் தவறு செய்கின்றனர் ஆஸி. தேர்வுக்குழுவினர், ஸ்மித், வார்னர் இல்லாத போது பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடியவர் கவாஜா மட்டுமே.
ஆஸ்திரேலிய அணி வருமாறு:
டிம் பெய்ன் (கேப்டன்), கேமரூன் பேங்க்ராப்ட், வார்னர், ஸ்மித், லபுஷேன், நேதன் லயன், கமின்ஸ், ஸ்டார்க், பேட்டின்சன், மைக்கேல் நெசர், ட்ராவிஸ் ஹெட், மேத்யூ வேட், ஹேசில்வுட், ஜோ பர்ன்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT