Published : 14 Nov 2019 14:55 pm

Updated : 14 Nov 2019 14:55 pm

 

Published : 14 Nov 2019 02:55 PM
Last Updated : 14 Nov 2019 02:55 PM

ஹாட்ரிக் துரத்தும் தீபக் சாஹர்: நெருங்கி வந்த இன்னொரு வாய்ப்பு கைகூடவில்லை

hat-trick-chasing-deepak-chahar-one-more-chance-against-up-not-realised

திருவனந்தபுரம்

வங்கதேசத்துக்கு எதிராக நாக்பூர் டி20 போட்டியில் எந்த நேரத்தில் ஹாட்ரிக் எடுத்தாரோ இந்திய ஸ்விங் பவுலர் தீபக் சாஹர், தொடர்ந்து ஹாட்ரிக் அவரை துரத்தியே வருகிறது.

3வது டி20 போட்டியில் ஹாட்ரிக் எடுத்த அவர் பிறகு 3 நாட்களில் 2வது ஹாட்ரிக்கை எடுத்ததோடு 13வது ஓவரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் மேலும் ஒரு ஹாட்ரிக் வாய்ப்பு அவருக்கு இன்றும் (வியாழன், 14-11) கிடைத்தது. திருவனந்தபுரத்தில் உ.பி. அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி ட்ராபி போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் பவுலர் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆனால் இம்முறை ஹாட்ரிக் வாய்ப்பு இடையில் கொடுத்த சிங்கிளினால் கைகூடவில்லை.

20வது ஓவரின் முதல் பந்தில் மோசின் கானை வீழ்த்திய தீபக் சாஹர் அடுத்த பந்தில் சிங்கிள் கொடுத்தார், பிறகு மீண்டும் 3 மற்றும் 4ம் பந்துகளில் ஷானு சைனி, ஷுபம் சவ்பே ஆகியோரை வீழ்த்தினார். ஆனால் ஹாட்ரிக் கைகூடவில்லை.

சாஹர் ஆனால் இந்த முறை 46 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது, ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Hat-trick chasing Deepak Chahar: One more chance against UP not realisedஹாட்ரிக் துரத்தும் தீபக் சாஹர்: நெருங்கி வந்த இன்னொரு வாய்ப்பு கைகூடவில்லைகிரிக்கெட்சையத் முஷ்டாக் அலி டி20தீபக் சாஹர்ராஜஸ்தான்உ.பி.ஹாட்ரிக் வாய்ப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author