முக்கியமான பவுலரை மும்பை இந்தியன்ஸுக்கு வழங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்

முக்கியமான பவுலரை மும்பை இந்தியன்ஸுக்கு வழங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்
Updated on
1 min read

வரும் 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடுகிறார் இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆடிவந்த நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்.

2014-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான ட்ரெண்ட் போல்ட் கடந்த 2018, 19 சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆடினார். இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் 33 ஆட்டங்களில் 38 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் போல்ட்.

அங்கிட் ராஜ்புத் என்ற வேகப்பந்து வீச்சாளர் கிங்ஸ் லெவன் பஞ்சாபிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் 2018-ல் கிங்ஸ் லெவன் அணிக்கு வந்தார், இதுவரை 23 ஐபிஎல் போட்டிகளில் 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்தியாவுக்கு ஆடாமல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரெ பவுலர் என்ற சாதனையை வைத்துள்ளார் அங்கித் ராஜ்புத்.

ஏற்கெனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கிங்ஸ் லெவன் முன்னாள் கேப்டன் அஸ்வின் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in