Published : 12 Nov 2019 10:46 AM
Last Updated : 12 Nov 2019 10:46 AM

தீபக் சாஹர் புதிதல்ல...

ஓய்வு பெற்ற விமானப்டை ஊழியரான லோகேந்திர சிங் காத்திருந்த இரவு நேரம் அது. அவரது மகனான தீபக் சாஹர், வங்கதேச அணிக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 3-வது டி 20 ஆட்டத்தில் தனது மந்திர பந்து வீச்சு திறனால் ஹாட்ரிக் சாதனையுடன் 3.2 ஓவர்களை வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக் கெட்களை வேட்டையாடினார். இதற்கான விதை விதைக்கப்பட்டது தாஜ்மஹாலின் பின் னணியில் ஆக்ராவில் அமைந்துள்ள லோகேந் திர சிங்கின் வீட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஆடுகளம்தான்.

தீபக் சாஹர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒன்றும் புதிய நபர் அல்ல. கடந்த 2010-ம் ஆண்டு ரஞ்சி கோப்பை சீசனில் ராஜஸ்தான் அணிக்காக 18 வயதில் அறிமுகமானார். ஹைதராபாத் அணிக்கு எதிராக அறிமுக ஆட்டத்தில் 7.3 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 8 விக்கெட்களை வேட்டையாடினார்.

ஸ்விங் பந்துவீச்சு தான் தீபக் சாஹரின் பலம். ஹைதராபாத் அணிக்கு எதிராக அவரது அனல் பறக்கும் பந்து வீச்சே இன்றளவும் உள்ளூர் கிரிக்கெட்டில் ரசிகர்களால் அதிகம் வளையொளியில் (யு டியூப்) பார்க்கப்பட்ட வீடியோவாக உள்ளது. அந்த ரஞ்சி சீசனில் 40 விக்கெட்களை கொத்தாக அள்ளிய தீபக் சாஹரின் மேம்பட்ட திறன்தான் ராஜஸ்தான் அணி மகுடம் சூட பெரிதும் உதவியது. ஆனால் காயங்கள் அடுத்த சில ஆண்டு களில் அவரது முன்னேற்றத் திற்கு தடையாக இருந்தன.

சில வருடங்களுக்கு முன்பு ஐபிஎல் டி 20 தொடரில் ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் (புனே) அணியில் இளம் வீரராக புகுந்த போது மகேந்திர சிங் தோனியின் பார்வையில் பட்டார் தீபக் சாஹர்.

இதன் பின்னர் கடந்த இரு சீசன்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தீபக் சாஹர் வளைத்து போடப்பட்டார். கேப்டன்ஷிப் பில் புத்திசாலித்தனத்துடனும் தந்திரமாகவும் செயல்படும் தோனி சிஎஸ்கே அணிக்காக தீபக் சாஹரை அதிஅற்புதமாக பயன்படுத்தினார். 2018 ஐபிஎல் சீசனில் 10 விக்கெட்கள் கைப் பற்றிய தீபக் சாஹர், 2019 சீசனில் 22 விக்கெட்களை அள்ளினார்.

இதன் பயனாகவே இங்கிலாந்தில் நடை பெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் மாற்று வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் தீபக் சாஹர். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தீபக் சாஹரின் திறனை கவனித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ஆய்வாளருமான தீப் தாஸ்குப்தா கூறுகையில், “ 2018-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டுவைன் பிராவோ காயம் காரணமாக விளையாடாததால் பவர் பிளே மற்றும் இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீசும் கூடுதல் பொறுப்பை தீபக் சாஹருக்கு கொடுத்தார் தோனி. இதுதான் தீபக் சாஹரின் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஸ்விங் பந்துவீச்சு ஒத்துழைக் காத சூழ்நிலையிலும் எப்படி பந்து வீசு வேண்டும் என கற்றுக்கொண்டார்” என்றார்.

லோகேந்திர சிங் கூறுகையில், “எங்களுக் குள் தேங்கியிருந்த கனவு தற்போது மெதுவாக நினைவாகி உள்ளது. நான் இந்திய விமானப் படையில் இருந்து வேலையை விட்டு விலகிய போது, நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். அது ஒரு தியாகம் என்று நான் உணரவில்லை. எனது மகன் 12 வயதில் விளையாடுவதைப் பார்த்தபோது அவனுக்குள் ஆற்றல் உள்ளதை அறிந்தேன். அவனுக்குள் சில இயற்கை குணங்கள் இருந்தன.

நானும் இளம் வயதில் கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டேன். ஆனால் எனது தந்தை அதை அனுமதிக்கவில்லை. எனவே எனது மகனின் விஷயத்தில் அவனது கனவை நினைவாக்க வேண்டும் என விரும்பினேன். நான் முறையான பயிற்சி பட்டங்களை பெறவில்லை. ஆனால் தீபக் சாஹரை வழிநடத்த கற்றுக் கொண்டேன்.

மால்கம் மார்ஷல், டேல் ஸ்டெயின் ஆகி யோரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் அவுட் ஸ்விங் செய்யும் போது மணிக்கட்டு பகுதியை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை வீடியோக்கள் மூலம் பார்ப்பேன். மேலும் அதுகுறித்து வர்ணணையாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்றும் கவனிப்பேன். பின்னர் அதனை சேகரித்துக் கொண்டு தீபக் சாஹருக்கு பயிற்சி கொடுப்பேன்.

அவன் பயிற்சி பெறுவதற்காகவே எனது சேமிப்பில் இருந்து இரு ‘டர்ப் ஆடுகளங்களை ஆக்ரா வீட்டில் வடிவமைத்திருந்தோம். பயிற்சியின் தீவிர தன்மை காரணமாக 8-ம் வகுப்புக்கு பிறகு அவனால் தொடர்ச்சியாக பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பந்து வீச்சு பயிற்சி, உடற் பயிற்சி, ஓய்வு, காயத்தில் இருந்து மீள்வது என ஒரு நாளில் 24 மணி நேரம் கூட தீபக் சாஹருக்கு போதுமானதாக இருக்கவில்லை.

தற்போது தீபக் சாஹருக்கு 27 வயதாகிறது. இன்னும் 6 வருடங்கள் வரை அவர் உச்ச கட்ட பார்மில் இருக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த காலக்கட்டத்துக்குள் தீபக் சாஹர் பாரம்பரிய வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால் சிறப்பானதாக இருக்கும்” என்றார்.

கற்ற இடம் சிஎஸ்கே

வங்கதேச அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நாக்பூரில் நடைபெற்ற 3-வது டி 20 ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. 175 ரன்கள் இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 19.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் 3.2 ஓவர்களை வீசி 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் சாதனையுடன் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் எனும் சாதனையையும் படைத் தார் தீபக் சாஹர். மேலும் டி 20 வரலாற்றிலேயே மிகச் சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கை வீரர் மெண்டிஸ் 4 ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி இருந்ததுதான் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. தீபக் சாஹர் கூறுகையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது பனிப்பொழிவையும், வியர்வையையும் எவ்வாறு எதிர் கொண்டு விளையாடுவது என்பதைக் கற்றுக்கொண்டேன். காய்ந்த மண்ணை அடிக்கடி கைகளில் தேய்த்துக் கொண்டு பந்து வீசுவேன். இதனால் கைகளை விட்டு நழுவாமல், இறுக்கமாகப் பிடித்து வீச முடியும்.

நாக்பூர் ஆடுகளத்தில் பக்கவாட்டு பகுதிகளில் உள்ள பவுண்டரியின் தூரம் அதிகம். இதனால் இந்த பகுதியை நோக்கி ஷாட்கள் மேற்கொள்ளும்படி பேட்ஸ்மேன்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்பது எங்களது திட்டம். பனிப்பொழிவு காரணமாக பந்து ஈரமாகி வந்ததால் பந்து வீச்சின் வேகத்திலும் மாற்றங்களை புகுத்தினேன்.

நான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதே எனக்குத் தெரியாது. போட்டி முடிந்த பின் தான் எனக்குத் தெரிய வந்தது. ஏனென்றால், கடைசி ஓவரில் இரு விக்கெட்டு களையும், அதற்கு முன் வீசிய ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தேன்.

வீட்டில் அமர்ந்து கனவு கண்டிருந்தால்கூட 4 ஓவர்களில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்துவது சாத்தியமில்லா தது. நான் கடினமாக உழைக்க விரும்புகிறேன். நான் இங்கு இருக்கிறேன் என்றால் அனைத்தும் கடவுள் செய்த உதவியால்தான். இந்த ஆட்டத்தில் முக்கிய கட்டத் தில் ஓவர்கள் வீச வேண்டும் என என்னிடம் ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. அணி நிர்வாகம் எனக்கு இந்த பொறுப்பை வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x