Published : 11 Nov 2019 05:19 PM
Last Updated : 11 Nov 2019 05:19 PM

என் மகன் ஒரு லட்சம் பந்துகளை வலைப்பயிற்சியில் வீசியிருப்பான்: ஹாட்ரிக் தீபக் சாஹர் குறித்து தந்தை நெகிழ்ச்சி

புதுடெல்லி, பிடிஐ

சாதனை ஹாட்ரிக்கிற்கு முன்பாக சுமார் 1 லட்சம் பந்துகளை என் மகன் வீசியிருப்பான் என்று ஹாட்ரிக் நாயகன் தீபக் சாஹரின் தந்தை லோகேந்திர சிங் சாஹர் நெகிழ்ச்சியுடன் தன் மகன் பற்றி தெரிவித்துள்ளார்.

லோகேந்திர சிங் முன்னாள் இந்திய விமானப்படை ஊழியர், தன் மகனின் இந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்தார், தான் பெரிய கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று விரும்பியிருக்கிறார், ஆனால் தன் சொந்தக் கனவை தற்போது தன் மகன் மூலம் பூர்த்தி செய்துள்ளார்.

தீபக் சாஹரின் தந்தை லோகேந்திர சிங் கூறியதாவது, “நாங்கள் இருவருமே வளர்த்தெடுத்த கனவு தற்போது நினைவாகியுள்ளது என்றே நான் உணர்கிறேன்” என்றார்.

தீபக் சாஹரின் ஸ்விங் பவுலிங் முதன் முதலில் கிரிக்கெட் உலகை அதிசயிக்க வைத்தது எப்போதெனில் அவர் தன் ரஞ்சி ட்ராபி அறிமுகப் போட்டியில் 10 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போட்டியில்தான், ஹைதராபாத் அணி 21 ரன்களுக்குச் சுருண்டது

யூ டியூபில் இவரது இந்த 8 விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சு அதிக முறை பார்க்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் மூத்த வீஅர் இப்ரஹீம் காலீல் என்பவரை இவர் வீழ்த்திய ‘பனானா இன்ஸ்விங்கர்’ அனைவராலும் மீண்டும் மீண்டும் பார்க்கப்பட்டது.

காயங்கள் பற்றி தீபக் சாஹர் தந்தை கூறும்போது, “தீபக் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில் காயம் குறுக்கிட்டது. காயம் ஏற்படும் காலத்தருணமும் முக்கியமானது

நான் இந்திய விமானப்படை பணியிலிருந்து ஓய்வு பெற்ற போது, நான் என்ன செய்கிறேன் என்பதைத் தெரிந்துதான் செய்தேன், இது ஏதோ தியாகம் என்று நான் கருதவில்லை. 12 வயதில் என் மகன் ஆட்டத்தைப் பார்க்கும் போதே அவனிடம் நிச்சயமாக திறமை உள்ளது, இயல்பான திறமைகள் அவனிடம் இருப்பதை அறிந்தேன்.

நான் கிரிக்கெட்டராக விரும்பினேன், என் தந்தை என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் என் மகனைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்று நான் விரும்பினேன். என்னிடம் முறையான பயிற்சிச் சான்றிதழெல்லாம் கிடையாது, ஆனாலும் தீபக்கிற்கு வழிகாட்டுவதற்காகக் கற்றுக் கொண்டேன். என்னுடைய சேமிப்பிலிருன்ஹ்டு 2 பிட்ச்களை உருவாக்கினேன். ஒன்று கான்கிரீட் பிட்ச். ஆக்ராவில் இதை உருவாக்கினேன், தீபக் பயிற்சிக்காகவே.

பயிற்சி தீவிரமடைந்ததால் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 24 மணி நேரம் பயிற்சிக்குப் போதவில்லை. பயிற்சி, உடல் பயிற்சி, ஓய்வு, மீண்டும் பயிற்சி என்று சென்று கொண்டிருந்தது, ஆனாலும் பட்டப்படிப்பை எப்படியோ முடித்து விட்டான்.

எனக்கு எப்பவும் மிகவும் பிடித்த பவுலர் மால்கம் மார்ஷல், டேல் ஸ்டெய்னையும் பிடிக்கும். நான் இவர்களது வீடியோக்களைப் பார்த்தேன். பவுலிங் போடும் போது அவர்களின் மணிக்கட்டு நிலை, பந்தின் தையல் நிலை ஆகியவற்றை உற்று கவனிப்பேன், வர்ணனையாளர்கள் கூறியதையும் வைத்து தீபக்குடன் பணியாற்றத் தொடங்கினேன்.

தீபக்கிற்கு 27 வயது ஆகிறது இன்னும் 6-7 ஆண்டுகள் கிரிக்கெட் உச்சக் காலக்கட்டம் மீதமுள்ளது. டெஸ்ட் போட்டியில் ஆடுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். கிரிக்கெட்டின் மரபான வடிவத்தில் என் மகன் ஆடுவதைப் பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்” என்றார் லோகேந்திர சிங்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x