Published : 05 Nov 2019 09:25 PM
Last Updated : 05 Nov 2019 09:25 PM

இந்தியாவில் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் சராசரி டான் பிராட்மேனையும் விட அதிகம்

ஆஸ்திரேலியாவின் கிரேட் என்று அழைக்கப்படும் ஒப்பிலா டான் பிராட்மேனின் ஆஸ்திரேலியாவில் வைத்துள்ள சராசரியைக் காட்டிலும் தற்போது ரோஹித் சர்மா அதிக சராசரியை வைத்துள்ளதாக சுவாரஸியப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக ஈ.எஸ்.பி.என். கேள்வி பதில் பகுதியில் வெளியான சுவையான தகவல் வருமாறு:

ரோஹித் சர்மா தற்போது இந்தியாவில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் 1298 ரன்களை 99.84 என்ற சராசரியில் எடுத்துள்ளார். டான் பிராட்மேன் ஆஸ்திரேலியாவில் ஆடிய 33 டெஸ்ட் போட்டிகளில் 4,322 ரன்களை 98.22 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார்.

எனவே ரோஹித் சர்மா தனது உள்ளூர் பார்மை இதே நிலையில் தொடர்ந்தால் டான் பிராட்மேனின் உள்நாட்டு சாதனையை சராசரி மற்றும் ரன் எண்ணிக்கையில் மேலும் உச்ச நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் 29 டெஸ்ட் போட்டிகளில் 77.25 என்ற சராசரி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x