Published : 05 Nov 2019 09:46 AM
Last Updated : 05 Nov 2019 09:46 AM

உலக ராணுவ தடகளத்தில் 3 தங்கம் வென்ற ஆனந்தனுக்கு கும்பகோணத்தில் உற்சாக வரவேற்பு

கும்பகோணம்

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு என்று உலக ராணுவ தடகளப் போட்டியில் பாரா பிரிவில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற குணசேகரன் ஆனந்தன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தைச் சேர்ந்தவர் குண சேகரன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விஜயா. கூலி வேலை செய்து வருகிறார். இவர்களின் மகன் ஆனந்தன்(32). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

ஆனந்தன் கடந்த 2005-ல் இந் திய ராணுவத்தில் பணியில் சேர்ந் தார். 2008-ம் ஆண்டு காஷ்மீர் மாநி லத்தில் எல்லைப் பிரிவில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, பூமிக்கடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்ததில், இவரது இடது கால் துண்டானது.

பின்னர், வலுவான தகடைக் கொண்டு செயற்கையாக கால் பொருத்தப்பட்டது. அதன் உதவி யுடன் நடைப்பயிற்சியையும், தொடர்ந்து வேகமாக ஓடும் பயிற்சியை மேற்கொண்ட ஆனந் தன், புனேவில் உள்ள ராணுவ விளையாட்டுப் பயிற்சியகத்தில் சிறப்பு பயிற்சிகளைப் பெற்றார். தொடர்ந்து பல்வேறு ஓட்டப் பந் தயங்களில் பங்கேற்று பரிசு பெற்றுவந்தார்.

கடந்த மாதம் சீனாவில் நடை பெற்ற ராணுவ வீரர்களுக்கான உலக தடகளப் போட்டியில் பாரா பிரிவில் பங்கேற்ற ஆனந்தன் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில், தனது சொந்த ஊரான கும்பகோணத்துக்கு நேற்று வந்த ஆனந்தனுக்கு உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. கும்ப கோணம் உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக மேளதாளங்களுடன் அவர் படித்த நேட்டிவ் பள்ளிக்கு அழைத்து வரப் பட்டார். தொடர்ந்து அங்கு அவருக் குப் பாராட்டு விழா நடைபெற்றது.

ஆனந்தன் கூறுகையில், “2020-ம் ஆண்டு டோக்கியோ நகரில் நடை பெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதுதான் என்னுடைய அடுத்த இலக்கு, நிச்சயம் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.

உலக அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள் ளாதது வருத்தமளிக்கிறது. இலக்கு களை அடைய எனக்கு தேவை யான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண் டும் என்பதே எனது எதிர்பார்ப்பு” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x