Published : 04 Nov 2019 05:12 PM
Last Updated : 04 Nov 2019 05:12 PM

2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை பட்டியல்: லீக் ஆட்டங்கள் வரை இந்தியா-பாக். மோதல் இல்லை


ஆஸ்திரேலியாவில் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் 2020ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் மோதல், லீக் ஆட்டம் முடியும் வரை இடம் பெறாமல் சுவாரஸ்யமில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் மோதுகின்றன. 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருந்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும். இதில் வங்கதேசம், இலங்கை அணிகள் தரவரிசையில் 9 மற்றும் 10-ம் இடத்தில் இருந்ததால், தகுதிச்சுற்று மூலம் விளையாடி சூப்பர் 12 சுற்றுக்கு வர உள்ளன.

தகுதிச்சுற்று அணிகள்

உலகக் கோப்பை தகுதிச்சுற்றுக்கு தகுதிச்சுற்றில் விளையாடி 6 அணிகள் வந்துள்ளன. இதில் நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 நாடுகள் தகுதிச்சுற்று மூலம் உலகக் கோப்பை தகுதிச்சுற்றுக்கு வந்துள்ளன.

குருப் ஏ

இந்த 6 அணிகளோடு இலங்கையும், வங்கதேசமும் சேர்க்கப்பட்டு குரூப்ஏ, குரூப் பி என பிரிக்கப்படும். இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, பப்புவா நியூ கினியா, ஓமன், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெறுகின்றன.

குருப் பி

குரூப் பி பிரிவில் வங்கதேசம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம் பெறுகின்றன.
இந்த குரூப் ஏ, குரூப் பி அணிகளுக்கு இடையிலான போட்டியில் இருந்து உலகக் கோப்பை ஆட்டங்கள் தொடங்குகின்றன. முதலாவது ஆட்டம் அக்டோபர் 18-ம் தேதி இலங்கை-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 18-ம் தேதியில் இருந்து 23-ம் தேதிவரை தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன

சூப்பர் 12 பிரிவு

இந்த ஆட்டங்களில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 பிரிவுக்கு தகுதி பெறும். சூப்பர் 12 சுற்றிலும் குரூப்1 மற்றும் குரூப் 2 என்ற பிரிக்கப்பட்டுள்ளன.

தேதி

அணி(1)

அணி(2)

இடம்

அக்.24

ஆஸி.

பாக்.

சிட்னி

அக்.24

இந்தியா

தெ.ஆப்பி

பெர்த்

அக்.25

ஏ1

பி2

ஹோபர்ட்

அக்.25

நியூஸி.

மே.இ.தீவுகள்

மெல்போர்ன்

அக்.26

ஆப்க.

ஏ2

பெர்த்

அக்.26

இங்கி

பி1

பெர்த்

அக்.27

நியூஸி

பி2

ஹோபர்ட்

அக்.28

ஆப்க

பி1

பெர்த்

அக்.28

ஆஸி

மே.இ.தீவுகள்

பெர்த்

அக்.29

பாக்.

ஏ1

சிட்னி

அக்.29

இந்தியா

ஏ2

மெல்போர்ன்

அக்.30

இங்கி.

தெ.ஆப்பி

சிட்னி

அக்.30

மே.இ.தீவுகள்

பி2

ஹோபர்ட்

அக்.31

பாக்.

நியூஸி

பிரிஸ்பேன்

அக்.31

ஆஸி.

ஏ1

பிரிஸ்பேன்

நவ.1

தெ.ஆ.

ஆப்கன்

அடிலெய்ட்

நவ.1

இந்தியா

இங்கி.

மெல்போர்ன்

நவ.2

ஏ2

பி1

சிட்னி

நவ.2

நியூஸி

ஏ1

பிரிஸ்பேன்

நவ.3

பாக்.

மே.இ.தீவுகள்

அடிலெய்ட்

நவ.3

ஆஸி

பி2

அடிலெய்ட்

நவ.4

இங்கி.

ஆப்கன்

பிரிஸ்பேன்

நவ.5

தெ.ஆ.

ஏ2

அடிலெய்ட்

நவ.5

இந்தியா

பி1

அடிலெய்ட்

நவ.6

பாக்.

பி2

மெல்போர்ன்

நவ.6

ஆஸி.

நியூஸி

மெல்போர்ன்

நவ.7

இங்கி

ஏ2

அடிலெய்ட்

நவ.7

மே.இ.தீவுகள்

ஏ1

மெல்போர்ன்

நவ.8

தெ.ஆ.

பி1

சிட்னி

நவ.8

இந்தியா

ஆப்கன்

சிட்னி

குரூப்-1

இதில் சூப்பர்12 சுற்றில் குரூப் 1 பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மே.இ.தீவுகள் இடம் பெற்றுள்ளன. இதில் தகுதிச்சுற்றில் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பெற்ற அணியும், குரூப் பி பிரிவில் 2-ம் இடம் பெற்றஅணியும் இடம் பெறும்.

குரூப்- 2

சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தகுதிச்சுற்றில் பி பிரிவில் முதலிடம் பெற்றஅணியும், குரூப் ஏ பிரிவில் 2-ம் இடம் பெற்றஅணியும் இடம் பெறும்.
குரூப் 12 சுற்றுகள் அக்டோபர் 24-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடக்கின்றன . நவம்பர் 11-ம் தேதி நடக்கும் முதலாவது அரையிறுதி அடிலெய்டிலும், 12-ம் தேதி நடக்கும் அரையிறுதிப் போட்டி சிட்னியிலும் நடக்கிறது. நவம்பர் 15-ம் தேதி இறுதிப்போட்டி மெல்போர்னில் நடக்கிறது.

இதில் லீக் ஆட்டங்கள் வரை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு எந்தவிதமான வாய்ப்புகளும் இல்லை. ஒருவேளை அரையிறுதியிலோ அல்லது இறுதிப்போட்டியிலோ வேண்டுமானால் மோதுவதற்கு வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x