Published : 03 Nov 2019 09:58 AM
Last Updated : 03 Nov 2019 09:58 AM

டெல்லியில் காற்று மாசுக்கிடையே இந்தியா - வங்கதேசம் டி 20-ல் இன்று மோதல்

புதுடெல்லி

இந்தியா - வங்கதேச அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

தீபாவளி பண்டிகைக்குப் பிறகு காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் நேரத் தில் டெல்லியில் கிரிக்கெட் போட் டியை நடத்துவது விமர்சனங்களை உருவாக்காமல் இல்லை. எனினும் விமான போக்குவரத்து பிரச்சினை கள் காரணமாக கடைசி நேரத்தில் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற இயலாது என பிசிசிஐ தெரிவித்தது.

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கு முன்னதாக இந்திய அணி சுமார் 20, டி 20 ஆட்டங்களில் பங்கேற்க உள்ளது. இவை உலகக் கோப்பை தொடருக்கான சிறந்த வீரர்களை கண்டறிய உதவுக்கூடும் என இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது.

இதன் ஒருகட்டமாகவே வங்க தேச அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளனர். விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப் பட்டுள்ளதால் ரோஹித் சர்மா கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் வேட்டையாடிய ரோஹித் சர்மா அதே பார்மை டி 20 தொடருக்கும் வியாபிக்கச் செய்யக்கூடும்.

அதேவேளையில் மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவண் சமீபகாலமாக பார்மில் இல்லாமல் தவித்து வருகிறார். தென் ஆப் பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொட ரில் அவர் முறையே 36 மற்றும் 40 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மேலும் விஜய் ஹசாரே டிராபியில் 7 ஆட்டங்களில் விளையாடி ஒரு அரை சதம் மட்டுமே எடுத்தார்.

இதனால் அணியில் தனது இடத்தை வேரூன்றிக் கொள்ள வேண்டுமானால் உயர்மட்ட செயல் திறனை ஷிகர் தவண் வெளிப்படுத்துவது அவசியம். நடுவரிசையில் கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், கிருணல் பாண்டியா வலு சேர்க்கக்கூடும். ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

ஏனெனில் மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன் ஆகியோர் வெளியே அமரவைக்கப்பட்டால் மட்டுமே ஷிவம் துபே விளையாடுவது சாத்தியமாகும். மீதம் உள்ள இடங் களை யுவேந்திர சாஹல், கலீல் அகமது, தீபக் ஷாகர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துகொள்ளக்கூடும்.

வங்கேதச அணியானது ஷகிப் அல் ஹசன் இல்லாமல் களமிறங்குகிறது. சூதாட்ட தரகர் தொடர்பாக புகார் அளிக்காத ஷகிப் அல் ஹசனுக்கு ஐசிசி 2 ஆண்டு கால தடைவிதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணிக்கு எதிரான தொடரில் வங்கதேச அணியானது மஹ்மதுல்லா ரியாத் தலைமையில் களமிறங்குகிறது. சமீபத்தில் தனது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆப்கானிஸ்தானிடம் வங்கதேச அணி தோல்வியடைந்தது.

எனினும் அடுத்து நடைபெற்ற முத்தரப்பு டி 20 தொடரில் 4 ஆட்டங் களில் 3-ல் வெற்றி கண்டது. எனினும் லீக் சுற்றில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை சந்தித்திருந்தது வங்கதேசம். எனினும் வலுவான பேட்டிங் வரிசையால் வங்கதேச அணி சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷகிப் அல் ஹசன் இல்லாத நிலையில் லிட்டன் தாஸ், முஸ்பிகுர் ரகிம், சவுமியா சர்க்கார் கூடுதல் பொறுப்புடன் விளையாடக்கூடும்.

அணிகள் விவரம்:

இந்தியா: ரோஹித் சர்மா (கேப் டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, கிருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் ஷாகர், யுவேந்திர சாஹல், கலீல் அகமது, தீபக் ஷாகர், ஷர்துல் தாக்குர்.

வங்கதேசம்: மஹ்மதுல்லா ரியாத் (கேப்டன்), தைஜூல் இஸ் லாம், மொகமது மிதுன், லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், நயிம் ஷெய்க், முஸ்பிகுர் ரகிம், அபிஃப் ஹொசைன், மொசடக் ஹொசைன், அமினுல் இஸ்லாம் பிப்லாப், அராபத் சன்னி, அபு ஹைதர், அல்-அமின் ஹொசைன், முஸ்டாபிஸூர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம்.

நேரம்: இரவு 7

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x