

உலகக்கோப்பைப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்ற போது இந்திய கிரிக்கெட் அணித் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் இந்திய கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு தேநீர் அளித்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் முன்னாள் விக்கெட் கீப்பர் பரூக் இன்ஜினியர்கேலி செய்திருந்ததையடுத்து எம்.எஸ்.கே.பிரசாத் கடும் அதிருப்தியுடன் அவரை விமர்சித்துள்ளார்.
“இது போன்ற சில்லரைத் தனமான கருத்தின் மூலம் பிறரது துன்பத்தில் இன்பம் காண்கிறார் இன்ஜினியர்” என்று பிரசாத் சாடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணித்தேர்வுக்குழுவில் பிரசாத், சரந்தீப்சிங், பராஞ்பே, ககன் கோடா, தேவங் காந்தி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார் அனுஷ்கா சர்மாவுக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தனர் என்பதை இன்ஜினியர் தெரிவிக்கவில்லை.
ஆனால் இன் ஜினியரின் இந்த கருத்து குறித்து எம்.எஸ்.கே. பிரசாத் கொதிப்படைந்து கூறும்போது, “இது போன்ற சில்லரைத்தனமான கருத்துகளின் மூலம் பிறரது துன்பத்தில் இன்பம் காண்டு சாடிஸம் வருத்தமளிக்கிறது. இது போன்ற அற்பத்தனமான கருத்தின் மூலம் தேர்வுக்குழுவினரையும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மனைவியையும் அவர் சிறுமைப்படுத்தியுள்ளார்.
பிசிசிஐ மூலம் இந்த தேர்வுக்குழு முறையாகத் தேர்வு செய்யப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்வோம்.
82 வயதாகும் இன்ஜினியர் தன் வயதுக்கேற்றார் போல் பேச வேண்டும். அவர் காலம் முதல் இன்று வரை இந்திய அணி கண்டுள்ள வளர்ச்சியை அவர் மகிழ்ச்சியடைய வேண்டும்”, என்றார்.