Published : 31 Oct 2019 10:56 AM
Last Updated : 31 Oct 2019 10:56 AM

டெல்லியில் கிரிக்கெட் போட்டியைவிட காற்று மாசு பிரச்சினைதான் முக்கியமானது: கவுதம் கம்பீர் பேச்சு

புதுடெல்லி 

டெல்லியில் கிரிக்கெட் போட்டியை நடத்துவதை விட காற்று மாசு பிரச்சினை தான் முக்கியமானது என்று பாஜக எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

டெல்லி மாநகரில் நிலவி வரும் அதிக அளவிலான காற்று மாசுக்கு இடையே வரும் 3-ம் தேதி இந்தியா - வங்கதேச அணி கள் இடையிலான டி 20 ஆட்டம் புதிதாக பெயரிடப்பட்டுள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் காற்று மாசு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கூறும்போது, “டெல்லியில் கிரிக்கெட் அல்லது மற்ற விளையாட்டு போட்டிகள் நடப்பதை விட காற்று மாசு பிரச்சினைதான் மிக முக்கியமானது என்று நான் நினைக் கிறேன். விளையாட்டு வீரர்கள் மட்டு மல்லாமல், டெல்லியில் வசிக்கும் அனை வருக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது.

கிரிக்கெட் போட்டி நடப்பதைவிட டெல்லி மக்கள் இந்த பிரச்சினையைத் தான் மிகப்பெரிய பிரச்சினையாக கருத வேண்டும் என்று நினைக்கிறேன். காற்று மாசு பிரச்சினையால் ஒட்டுமொத்த டெல்லி நகரமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கிரிக்கெட் போட்டி என்பது ஒரு சிறிய விஷயம். ஆனால் காற்று மாசு பிரச்சினையால் குழந்தைகள் முதல் முதியோர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, இந்த பிரச்சினைக்கு நாம் தான் பொறுப்பு. காற்று மாசு தற்போது கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ள தாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால், இந்த முன்னேற்றத்துக்கு மக்கள் மேற்கொண்ட முயற்சிதான் முக்கிய காரணம். இந்தப் பிரச்சினை குறைவதற்கு நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். எனவே போட்டி நடக்குமா அல்லது நடக்காதா என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. அது நடக்கும் என்று நினைக்கிறேன். அது நடக்கவேண்டும்.

ஆனால், டெல்லி மக்கள் வருடம் முழுவதும் காற்று மாசு பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது. இது கிரிக்கெட் போட்டியை விட மிகவும் முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ள காரணமாக அமைந்துள்ளது. அனைவரும் சிறந்த சுற்றுச்சூழலில் விளையாட வேண்டும் என்று விரும்பு கிறோம். இது விளையாட்டு வீரர்களுக்கும் பொருந்தும். ஆனால் காற்று மாசு பிரச்சினை அதிகமாக உள்ள நிலையில், போட்டியை நடத்துவதற்கு வேறு ஒரு நகரத்தைத் தேர்வு செய்வது குறித்து யோசிக்கலாம் என நான் நினைக்கிறேன். அதிக அளவிலான காற்று மாசு அளவை குறைப்பது தொடர்பாக டெல்லி அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x