முதல் வெற்றியை பெறுமா சென்னையின் எப்சி? - கொல்கத்தாவுடன் இன்று மோதல்

முதல் வெற்றியை பெறுமா சென்னையின் எப்சி? - கொல்கத்தாவுடன் இன்று மோதல்
Updated on
1 min read

சென்னை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங் கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோது கின்றன.

இரு முறை சாம்பியனான சென்னையின் எப்சி தனது முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் கோவாவிடம் தோல்வி கண்டிருந்தது. தொடர்ந்து சொந்த மண்ணில் மும்பை சிட்டி எப்சி அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தை கோல்களின்றி டிரா செய்தது. இந்நிலையில் தனது 3-வது ஆட்டத்தில் மீண்டும் சொந்த மண்ணில் களமிறங்குகிறது சென்னையின் எப்சி. ரஃபேல் கிரிவல்லரோ, அனிருத் தாபா, லால்லின்ஜுவாலா, சாங்தே, டிராகோஸ் ஃபிர்டுலெஸ்கு உள்ளிட்டோர் சென்னை அணிக்கு பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

கோவாவுக்கு எதிராக தற்காப்பு ஆட்டத்தில் பலவீனம் காணப்பட்ட நிலையில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த துறையில் சென்னையின் எப்சி அணி வீரர்கள் சற்று துடிப்புடன் செயல்பட்டனர். இதனால் லூஸியன் கோயன் தலைமையிலான சென்னை எப்சி அணியின் தற்காப்புப் படை இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கும் சவால் தரக்கூடும்.

கொல்கத்தா அணியானது 5-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்குகிறது. அந்த ஆட்டத்தில் அசத்திய டேவிட் வில்லியம்ஸ், ராய் கிருஷ்ணா, எடு கார்சியா, பிரபிர்தாஸ், மைக்கேல் சூசைராஜ் ஆகியோர் சென்னையின் எப்சி அணிக்கு நெருக்கடி தரக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in