Published : 03 Jul 2015 09:49 AM
Last Updated : 03 Jul 2015 09:49 AM

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தனிநபர் செஸ் போட்டியில் திருச்சியின் ஜெனித்தா ஆண்டோ 3-வது முறையாக சாம்பியன்: கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வதே இலக்கு

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தனி நபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து மூன்றா வது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார் திருச்சி யைச் சேர்ந்த ஜெனித்தா ஆண்டோ.

சிறு வயதிலேயே போலியோ நோயால் கால்கள் செயலி ழந்துவிட்டாலும், தனது விடாமுயற் சியாலும், ஆர்வத்தாலும் பல்வேறு சர்வதேச செஸ் போட்டிகளில் பங் கேற்று வெற்றிக் கோப்பைகளை தனதாக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகிறார் 28 வயதான ஜெனித்தா.

திருச்சி, பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் காணிக்கை இருதயராஜ்- ஜெயராணி தம்பதிக்கு 3-வது குழந்தையாகப் பிறந்தவர் ஜெனித்தா ஆண்டோ. 3 வயதில் போலியோ நோய் தாக்கி முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு, இடுப்புக் கீழே உடல் பாகங்கள் செயலிழந்தன. ஆனால், செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த ஜெனித்தாவை ஊக்குவித்து அவருக்கு கற்றுத் தந்தார் அவரது தந்தை.

“8 வயதில் மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்றபோது, பலரும் பாராட்டியதால் கிடைத்த ஊக்கமே இன்று உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று கோப்பை களைப் பெறுவதற்கு காரணமாக அமைந்தது” என்கிறார் ஜெனித்தா.

தொடர் வெற்றி

2010-ல் வுமன் கேன்டிடேட் மாஸ்டர், 2013-ல் வுமன் இன்டர்நேஷ னல் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களையும் பெற்றுள்ளார்.

கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் ஸ்லோ வாக்கியா நாட்டில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று சாம் பியன் பட்டத்தையும், தங்கக் கோப்பையையும் வென்றார். திருச்சியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பெற்றதால், உலக செஸ் போட்டிக்கு இவரை அரசு தனது செலவிலேயே அனுப்பி வைத்தது.

இப்போட்டியில் 11 நாடுகளிலி ருந்து 38 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார் ஜெனித்தா. இப்பட்டத்தை இவர் 3-வது முறையாகக் கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

கிராண்ட் மாஸ்டராக இலக்கு

தினமும் 5 மணி நேரம் வரை தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடும் ஜெனித்தா, ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள கிராண்ட் மாஸ்டர் போட்டியில் பங்கேற்று அந்த பட்டத்தை வெல்வதே தனது இலக்கு என்கிறார். இதற்காக சென்னையில் உள்ள பயிற்சி யாளரிடம் ஆன்-லைன் மூலம் பயிற்சி பெற்று வருகிறார்.

உடலில் ஊனத்தை பொருட் படுத்தாமல், பெற்றோர் அளித்த ஊக்கம் காரணமாக, விடாமுயற்சியால் வெற்றிகளை குவித்து வரும் ஜெனித்தா பல ருக்கும் முன்னுதாரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x