3-வது தங்கம் வென்றார் குணசேகரன்

3-வது தங்கம் வென்றார் குணசேகரன்
Updated on
1 min read

உலக ராணுவ விளையாட்டில் பாரா தடகள வீரரான இந்தியாவின் ஆனந்தன் குணசேகரன் 3-வது தங்கப் பதக்கம் வென்றார்.

சர்வதேச ராணுவ விளையாட்டு கவுன்சில் சார்பில் 7-வது உலக ராணுவ விளையாட்டு போட்டிகள் சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பாரா தடகளத்தில் இந்தியாவின் ஆனந்தன் குணசேகரன் 200 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 24.31 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

கொலம்பியாவின் பஜார்டோ பார்டோ தியோடிசெலோ (26.11) வெள்ளிப் பதக்கமும் பெரு நாட்டின்காஸா ஜோஸ் (27.33) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். இந்ததொடரில் ஆனந்தன் குணசேகரன் வெல்லும் 3-வது தங்கம் இதுவாகும். 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டத்திலும் அவர் தங்கம் வென்றிருந்தார்.

ஈட்டி எறிதலில் இந்தியாவின் சிவ்பால் சிங் 83.33 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். போலந்தின் க்ருகோவ்ஸ்கி மார்சின் (78.17) வெள்ளிப் பதக்கமும், இலங்கையின் ரணசிங்க (75.35) வெண்கலப் பதக்கமும் பெற்றனர். ஆடவருக்கான 25 மீட்டர் சென்டர்பையர் பிஸ்டர் பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

140 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரில் 27 விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியா 7 பதக்கங்களைவென்றுள்ளது. இதில் 6 தங்கம், ஒரு வெண்கலம் அடங்கும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in