Published : 24 Oct 2019 09:05 PM
Last Updated : 24 Oct 2019 09:05 PM

கோலி-கும்ப்ளே மோதல் இப்போது ஏற்பட்டிருந்தால் கும்ப்ளேயை மாற்ற கங்குலி ஒருக்காலும் அனுமதித்திருக்க மாட்டார்: வினோத் ராய் மனம் திறப்பு

விராட் கோலி ஆயிரம் சாதனைகளை கேப்டனாகவும் பேட்ஸ்மெனாகவும் முறியடிக்கலாம் ஆனால் கும்ப்ளேவுக்கு அவர் செய்ததை இந்திய ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் கமிட்டித் தலைவர் வினோத் ராய், கங்குலியின் உறுதியைப் பாராட்டும் விதமாகப் பேசியுள்ளார்.

விராட் கோலி, கும்ப்ளே இடையே ஏற்பட்ட மோதல் குறித்து வினோத் ராய் கூறும்போது, “பெரிய அளவில் சர்ச்சைகள் ஏற்பட்டது அப்போது,யார்தான் அதை திறம்படக் கையாண்டிருக்க முடியும்? இப்போது கோலி-கும்ப்ளே பிரச்சினை ஏற்பட்டிருந்தால் பிசிசிஐ தலைவராக கங்குலி நிச்சயம் கோலி பேச்சைக் கேட்டு கும்ப்ளேயை விலக அனுமதித்திருக்க மாட்டார். நிச்சயம் அனில் கும்ப்ளேதான் பயிற்சியாளர் என்று கோலி மீது திணித்திருப்பார், அது மேலும் டென்ஷன்களையே உருவாக்கும். நான் கும்ப்ளேயை மதிக்கிறேன் காரணம் நான் அவர் பெருந்தன்மையாக விலகினா” என்றார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியின் போது கோலி, சாஸ்திரியை என்ன வேண்டுமானாலும் செய்ய சுதந்திரமாக அவர்கள் கை அவிழ்த்து விடப்பட்டதா என்ற கேள்விக்கு வினோத் ராய், “கோச்சிற்கும் கேப்டனுக்கும் சுதந்திரம் அளிக்காமல் வேறு யாருக்கு அளிப்பது? கோலி, சாஸ்திரி திறமைகள் பற்றி அலசி ஆராய என்னிடம் போதிய வலுவில்லாததால் நான் டயானா எடுல்ஜி தலையிடுவதையும் தடுத்து விட்டேன்” என்றார்.

சிஓஏ கையில் பிசிசிஐ நிர்வாகம் இருந்த போது பயிற்சியாளர் கும்ப்ளேயை மாற்றுமாறு கேப்டன் விராட் கோலி அடிக்கடி எஸ்.எம்.எஸ் அனுப்புவதகா டயானா எடுல்ஜி பிற்பாடு அம்பலப்படுத்தினார்.

இது தொடர்பாக வினோத் ராய் கூறும்போது, “கும்ப்ளேயின் பதவிக்காலத்தை நீட்டிக்க முடிவதற்கான விதிமுறைகள் இருந்திருந்தால் நான் அதைத்தான் செய்திருப்பேன். அதனால்தான் கங்குலி, லஷ்மண், சச்சின் இருந்த சிஏசியை கோலியுடன் பேசக் கோரினேன். நான் கும்ப்ளே, சச்சின், சவுரவ், விராட் ஆகியோருடன் விரிவாகவே பேசினேன்.

சவுரவ் சமீபமாக என்னிடம் கூறினார் அவர் கோலியுடன் நீண்ட நேரம் பேசியதாக. இவர்களாலேயே கோலியை சம்மதிக்க வைக்கமுடியவில்லை எனில் நான் எப்படி முடியும்? ஓய்வறையில் கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் மோதல் ஏற்பட்டால் யாரை அனுப்புவது சுலபம், பயிற்சியாளரைத்தான். இங்குதான் நாங்கள் அகப்பட்டுக் கொண்டோம்.” என்றார் வினோத் ராய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x