Published : 24 Oct 2019 02:53 PM
Last Updated : 24 Oct 2019 02:53 PM

புதியன புகுமா? பழைய கதையே தொடருமா? - கங்குலியின் தலைமையில் கிரிக்கெட்டில் பணத்தின் திருவிளையாடல் குறையுமா?

கிரிக்கெட் உலகில் சமீபகாலமாக இரண்டுத் திறவுச்சொற்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, ஒன்று "context", மற்றொன்று "reform" (சீர்த்திருத்தம்). ஆடுகளத்திற்கு முந்தைய சொல்லும் களத்துக்கு வெளியே பிந்தைய சொல்லும் புழங்கி வருகிறது. இந்த இரண்டு வார்த்தைகள்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதையும், சட்ட உரிமைப்படி ஐசிசி நிர்வகிக்கும் (de jure) உலக கிரிக்கெட் நிர்வாக அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் ஆனால் உண்மையில் (de facto) கிரிக்கெட்டை நடத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மாற்றங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பாக முன்னாள் பிசிசிஐ தலைவரும் ஐசிசியின் தனித்த சேர்மன் ஷஷாங்க் மனோகர் எழுதினார், “சமீப கடந்த காலத்தில் ஐசிசி எடுத்த முடிவுகள் கிரிக்கெட் ஆட்டத்தின் நலன்களுக்காக அல்ல என்பது ஒன்றும் ரகசியமல்” என்றார்.

இதையே நாம் பிசிசிஐக்கும் சொல்லலாம். கிரிக்கெட்டில் தங்களுக்குத்தான் அதிக ரசிகர்கள், பார்வையாளர்கள் இருக்கிறார்கள் ஆகவே ஐசிசி வருவாயில் தங்களுக்கு அதிகப் பங்கு வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியது. 2014-ல் பிசிசிஐ, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுடன் இணைந்து புதிய சூத்திரத்தை உருவாக்கினர் அதில் இந்த பிசிசிஐ நல வருவாய் விவகாரம் பளிச்சிட்டது. அதன் பிறகு வந்தது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, என்.ஸ்ரீநிவாசனின் தலைமைப் பொறுப்பு முடிவுக்கு வந்தது. சிறிது காலத்திற்கு இந்தியாவின் கிரிக்கெட் நிர்வாகம் உள்முகமாகத் திரும்பியது. சர்வதேச அளவில் பிசிசிஐ தனது வலுப்பிரயோகத்தை அவ்வப்போது செய்து வந்தது, சாம்பியன்ஸ் ட்ராபியிலிருந்து விலகுவோம் என்று அச்சுறுத்தியது.

2012-ல் ஐசிசி நிர்வாகம் தனது ஆட்சியதிகாரத்தை பிரயோகித்தது, ஆனால் உல்ஃப் கமிட்டி அறிக்கை விளையாட்டில் கடைபிடிக்கப்படும் சிறந்த மாதிரிகளைச் சுட்டிக்காட்டி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாய் அனைத்து வாரியங்களுக்கும் சரிசமமாகப் பகிர்வது பற்றிக் கூறியது. ஆனால் அப்போது பிசிசிஐ அந்த அறிக்கையை சிரித்துப் புறந்தள்ளியது. அதாவது பிசிசிஐ-யின் கருத்து என்னவெனில் சீர்த்திருத்தங்கள் நமக்கு இல்லை, குறைந்த வருவாய் ஈட்டும் நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கும், செல்வாக்கற்ற கிரிக்கெட் வாரியங்களுக்கும் பொருந்தும் என்றே பிசிசிஐ நம்பியது.

இப்போது பழைய பிசிசிஐ-யின் மற்றுமொரு இயற்பாடாக புதிய பிசிசிஐ தலைவர், நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். சில பழைய மோதல்களும் தொடங்கத் தயாராக உள்ளன. உள்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் விவகாரங்கள் மேலும் குளறுபடியாகும் என்று தெரிந்தோ என்னவோ ஐசிசி பதவியிலிருந்த படி தொலைவிலிருந்து பிசிசிஐ காட்சிகளைப் பார்க்க முடிவெடுத்து ஐசிசி பக்கம் சென்று விட்டார். ஆனால் இனிமேல்தான் அவருக்கு சிக்கல் இருக்கிறது. தனித்த கிரிக்கெட் வாரியங்களில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்காமல் சீர்த்திருத்தங்களில் ஒரு தனித்த, சுதந்திர சேர்மனாக அவர் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

ஐசிசி நிர்வாகத்திற்கான பரிந்துரைகளை வழங்க ஆஸ்திரேலியாவின் எர்ல் எடிங்ஸ் என்பவரை அவர் நியமித்துள்ளார். எடிங்ஸுடன் கூடிய பணிக்குழு இந்தியாவிலிருந்து பிரதிநிதியைக் கொண்டிருக்கவில்லை என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இப்போதுதான் பிசிசிஐ நிர்வாகம் வந்து விட்டதே அதனால் ஒரு பிரதிநிதியைப் பிற்பாடு சேர்க்க வாய்ப்புள்ளது.

துபாயில் சமீபமாக நடந்த ஐசிசி கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் உலகக் கோப்பை டி20 போட்டியையும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாக மாற்றலாம் என்றும் முன்மொழிவு மேற்கொள்ளப்பட்ட போது, பிசிசிஐயின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படாத போதிலும், பிசிசிஐ போலவே இந்த விஷயத்தை ஐசிசி கையாண்டது.

பிசிசிஐ-யின் பழைய பாதுகாவலர்கள் முற்றிலும் நிர்வாகதிலிருந்து அகலாத, புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்காத ஒரு இடைப்பட்ட காலத்தில் பிசிசிஐயின் செயலர் (பொறுப்பு) அமிதாப் சவுத்ரி இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக துபாய் பறந்தார். உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் கமிட்டியான சிஓஏ-வின் உத்தரவுகளுக்கு எதிராக அவர் துபாய் பறந்தார். ஐசிசி-யின் வரைவு முன்மொழிவுக்கு இவரது வாக்கு அல்லது வாக்கின்மை முக்கியம்.

பிசிசிஐ தலைவர் கங்குலி 50 ஓவர் உலகக்கோப்பையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவதை எதிர்த்துள்ளார். மேலும் ஐசிசி தொடர்களை அதிகரித்தால் இந்திய அணியின் சர்வதேச போட்டிகளும், குறிப்பாக 10 அணி மோதும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் பாதிப்பு வரும் என்றும் வருவாய் குறையும் என்றும் ஐசிசி தொடர்களை அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பிசிசிஐ. பிசிசிஐ சி.இ.ஓ. ஐசிசியின் சி.இ.ஓ. மனு சானேய்யுக்கு 10 ஆட்சேபணைகளை எழுப்பினார். இந்த மாற்றங்கள் புத்திசாலித்தனமானதல்ல என்றார்.

இது நாள் வரையிலும் உச்ச நீதிமன்றத்துடன் போராடிய பிசிசிஐ இனி ஐசிசியை எதிர்த்து தன் எதிர்ப்பைத் திருப்பி விடும். மற்ற கிரிக்கெட் நாடுகளை அடக்கவும் இருதரப்பு தொடர்களிலிருந்து விலகுவோம் என்று மிரட்டியும் ஐசிசிக்கு எதிராகப் போராடக் கிளம்பும். இந்த மாதிரி மிரட்டல்கள்தான் சில ஆண்டுகளாக வழிமுறையாக இருந்து வருகிறது. ஆகவே அதிக மாற்றங்களினால் இன்னும் அதிகமாக பழைய வழிமுறையே நீடிக்கும். மிகவும் நுட்பமாக இருந்தாலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வாரியங்களிடம் வீட்டோ பவர் இருக்கும் போது மற்ற கிரிக்கெட் நாடுகளை அடக்குவது என்பது ஐசிசியின் உத்தியாகவே இருந்து வந்திருக்கிறது.

ஐசிசியின் நடப்பு நடைமுறைகள் மீது நாம் பரிவு காட்ட முடியாது காரணம் பிசிசிஐ வழியில்தான் ஐசிசியும் காய்களை நகர்த்துகிறது. எந்த அமைப்புகளுக்கும் பணம் என்பது இதைத்தான் செய்யும். விளையாட்டிலிருந்து இவர்களின் பொறுப்பை விடுவித்து விடும். இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பாக இது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கும் காரணம் இந்தியா தனது உள்நாட்டு அரசியலை சர்வதேச மட்டத்திற்கும் கடத்திச் செல்வதற்குத் தயாராக இருப்பது போல் தோன்றுகிறது.

ஐசிசி தானே நேரடியாகக் கட்டுப்படுத்தும் ஐசிசி தொடர்களை அதிகரித்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் குறையும் என்பதே பிசிசிஐ-யின் வாதம். ஆனால் அனைத்து வாரியங்களுக்குமான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலாக இருக்கும் போது அனைவரது நலன்களையும் பார்க்க வேண்டும் என்பது ஐசிசியின் முக்கியப் பொறுப்பாகும். ஆனால் இந்த விஷயத்தில் இருதரப்பினரும் தார்மீக ரீதியான உயர் நிலைகளை தங்களுக்கு அளித்துக் கொள்ள முடியாது.

2016-ல் ஷஷாங்க் மனோகர் ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்ற போது ஐசிசியில் இந்தியா-ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் வாரியங்களிடம் குவிந்திருந்த மட்டற்ற அதிகாரத்தை அகற்றுவதாக அமைந்தது. பிசிசிஐ-யின் முன்னாள் தலைவராக பிசிசிஐ எப்படி இயங்கும் என்பதை மனோகர் நன்றாகவே அறிந்திருக்கிறார். ஆனால் எப்போதும் நல்ல நோக்கங்கள் மோசமான வழிமுறைகளால் சீரழிந்து விடும்.

எதிர்ப்பின்றி தன்னை பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து கங்குலி பிசிசிஐ அரசியல் குறித்து தான் ஆச்சரியமடைந்ததாகத் தெரிவித்தார். எனவே கங்குலி தன் அரசியல் லட்சியங்களை வளர்த்தெடுக்க விரும்பினால் கங்குலியின் இந்த புதிய பதவி நல்ல பயிற்சிக்களமாக அமையும்.

கட்டுரை ஆசிரியர்: சுரேஷ் மேனன் (தி இந்து, ஆங்கிலம்)

கட்டுரையின் அசல் தலைப்பு: New wine in old battles, as money makes the game go round, இங்கு தமிழ் தலைப்பு அசல் கட்டுரையாளரின் பொருளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் வடிவம்: இரா.முத்துக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x