Published : 22 Oct 2019 06:21 PM
Last Updated : 22 Oct 2019 06:21 PM

இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே உள்ள மாபெரும் இடைவெளி: சுவையான தகவல்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் எந்த வித சவாலும் இல்லாமல் அந்த அணி சரணடைந்து 3-0 என்று தோல்வியடைந்ததில் இந்திய அணி சிலபல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

இந்தத் தொடரில் மொத்தம் இந்தியா 60 தென் ஆப்பிரிக்கா விக்கெட்டுகளை வீழ்த்த தென் ஆப்பிரிக்க அணியோ 25 இந்திய விக்கெட்டுகளைத்தான் வீழ்த்த முடிந்துள்ளது.

இலங்கை அணி வங்கதேச அணியை 2007-ல் தங்கள் சொந்த மண்ணில் எதிர்த்து ஆடியபோது இலங்கை அணி 60 வங்கதேச விக்கெட்டுகளைக் கைப்பற்ற அந்த அணி 16 இலங்கை விக்கெட்டுகளைத்தான் கைப்பற்ற முடிந்தது, இதுதான் விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வித்தியாசமாகும்.

இந்திய பவுலர்களின் சராசரி 22.84 என்று இருக்க தென் ஆப்பிரிக்க பவுலர்களின் சராசரியோ 75.44 என்று மிகப்பெரிய வித்தியாசமாக உள்ளது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 17.50 என்ற சராசரியில் 26 விக்கெட்டுகளை வீழ்த்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் 70.20 என்ற சராசரியில் 10 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.

பேட்டிங்கில் இந்தியாவின் டாப் 5 வீரர்களின் சராசரி 91.50 என்று இருக்க தென் ஆப்பிரிக்காவின் டாப் 5-இன் சராசரி 17.10 ஆக உள்ளது.

புள்ளி விவரங்கள்: ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x