Published : 22 Oct 2019 02:42 PM
Last Updated : 22 Oct 2019 02:42 PM

நிரந்தரமாக 5 மைதானங்களில்தான் டெஸ்ட் போட்டிகள் நடைபெற வேண்டும்: ஆஸி., இங்கிலாந்து மாதிரியை விரும்பும் விராட் கோலி

ராஞ்சி, பிடிஐ

எதிர்கால உள்நாட்டு சர்வதேச தொடர்களில் டெஸ்ட் போட்டிகளுக்கு 5 நிரந்தர மைதானங்களையே பிசிசிஐ தேர்வு செய்ய வேண்டும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போல் டாப் அணிகள் வரும்போது இந்த 5 மைதானங்களில்தான் நடைபெற வேண்டும் என்று கோலி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன், சிட்னி, பெர்த், பிரிஸ்பன், அடிலெய்ட், இங்கிலாந்தில் லார்ட்ஸ், ஓவல், ட்ரெண்ட் பிரிட்ஜ், ஓல்ட் ட்ராபர்ட், எட்ஜ்பாஸ்டன், சவுதாம்ப்டன், ஹெடிங்லே என்று 7 பிரதான டெஸ்ட் மைதானங்கள் உள்ளன. இந்தியாவிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, கான்பூர், நாக்பூர், மொஹாலி போன்ற பிரதான மையங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வந்தன, ஆனால் திடீரென பிரதான மையங்கள் ஒதுக்கப்பட்டு ஜார்கண்ட், புனே, தரம்சலா போன்ற மையங்கள் மையத்துக்கு வந்தன.

இது குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்புகையில் விராட் கோலி, “இது உண்மையில் சிறந்த கேள்வி. நீண்ட காலமாக இதனை விவாதித்து வருகிறோம், என்னைப் பொறுத்தவரையில் நாமும் நிரந்தர டெஸ்ட் மையங்களில் டெஸ்ட் போட்டிகளை நடத்த வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட் உற்சாகமாக, சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமெனில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நிரந்தரமான பிரதான விளையாட்டு மையங்கள் தேவை என்பதுடன் நான் முழுதும் உடன்படுகிறேன். ஆங்காங்கே பரவலாக டெஸ்ட் போட்டிகளை நடத்துதல் கூடாது. சில மைதானங்களில் கூட்டம் வருவதேயில்லை.

எனவே வலுவான 5 டெஸ்ட் மைதானங்கள் தேவை. அதாவது வெளியேயிருந்து வரும் அணிகள் இந்த 5 மைதானங்களில்தான் டெஸ்ட் போட்டிகள் நடைபெறப் போகிறது என்று அவர்கள் தயாரித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

ஓகே, மாநில சங்கங்கள் உள்ளன, டெஸ்ட் போட்டிகளை சுழற்சி முறையில் பல இடங்களில் நடத்தலாம். ஆனால் இது டி20, ஒருநாள் போட்டிகளுக்கு சரியாக இருக்கும், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு அணிகள் எங்கு அவர்கள் விளையாடப்போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவேண்டும். இந்த 5 மைதானங்களில்தான் நான் ஆடப்போகிறோம் என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும்.

இன்னின்ன பிட்ச்களில் ஆடப்பொகிறோம், இன்னமாதிரியான ரசிகர்கள் வருவார்கள் இவையெல்லாம் தெரியவேண்டும்

நம் அணிக்கு அப்படித்தான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது எந்த 4 மைதானங்களில் ஆடப்போகிறோம் என்று தெரிகிறது. அங்கு பிட்ச் இப்படித்தான் இருக்கும், மைதானம் முழுக்க ரசிகர்கள் இருக்கப் போகிறார்கள் என்பது நமக்கு தெரிய வேண்டும்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x