Last Updated : 20 Oct, 2019 11:07 AM

 

Published : 20 Oct 2019 11:07 AM
Last Updated : 20 Oct 2019 11:07 AM

3 ஆண்டுகளுக்குப் சதம் அடித்த ரஹானே; ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம்: வலுவான நிலையில் இந்திய அணி

ராஞ்சி,

ராஞ்சியில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் அஜின்கே ரஹானே சதம் அடித்தார், ரோஹித் சர்மா 150 ரன்களை எட்டினார்.

இருவரின் அசைக்க முடியாத உறுதியான கூட்டணி 200 ரன்களைக் கடந்தது. இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் சேர்த்துள்ளது. ரஹானே 17 பவுண்டரிகள், ஒருசிக்ஸர் உள்பட 115 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 168 ரன்களுடனும், ரவிந்திர ஜடேஜாவும் களத்தில் உள்ளனர்.

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல்நாளான நேற்று உணவு இடைவேளைக்கு முன்பே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ரோஹித் சர்மா, ரஹானே கூட்டணி சேர்ந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா சதம் அடித்தார்.

போதிய வெளிச்சமின்மையால் முதல்நாள் ஆட்டம் விரைவாகவே முடிக்கப்பட்டது. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்திருந்தது. இதில் ரஹானே 83 ரன்களிலும், ரோஹித் சர்மா 117 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இருவரும் இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் ரபாடா, இங்கிடி, நோர்ட்ஜே ஆகியோர் காலைநேர குளிர்ந்த சூழல், புதிய பந்து ஆகியவற்றை பயன்படுத்தி விக்கெட் எடுக்க முயன்றனர். ஆனால், ரோஹித் சர்மா, ரஹானே இருவரும் மிகவும் கவனத்துடன் பந்துகளைக் கையாண்டதால், விக்கெட் வீழ்த்தும் முயற்சியில் தோல்வி அடைந்தனர்.

மிகவும் நேர்த்தியான ஷாட்களை ஆடிய ரஹானே டெஸ்ட் அரங்கில் தனது 11-வது சதத்தை 170 பந்துகளில் நிறைவு செய்தார். உள்நாட்டில் ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்குப்பின் ரஹானே சதம் அடித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x