Published : 20 Oct 2019 10:14 AM
Last Updated : 20 Oct 2019 10:14 AM

ஐஎஸ்எல் கால்பந்து இன்று தொடக்கம்: கொல்கத்தா - கேரளா மோதல்

கொச்சி 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 6-வது சீசன் கொச்சியில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட் டத்தில் அட்லெடிகோ டி கொல் கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான பெங்க ளூரு எப்சி, இரு முறை சாம்பி யன்களான சென்னையின் எப்சி, அட்லெடிகோ டி கொல்கத்தா உள் ளிட்ட 10 அணிகள் கலந்து கொள் ளும் இந்தத் தொடரானது இன்று தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறுகிறது. இம்முறை புனே சிட்டி எப்சி அணிக்கு பதிலாக ஹைதராபாத் எப்சி அணி சேர்க்கப்பட்டுள்ளது. அதேவேளையில் டெல்லி டைன மோஸ் அணி தனது இருப்பிடத்தை புவனேஷ்வருக்கு மாற்றியுள்ள நிலையில் அணியின் பெயரை ஒடிசா எப்சி என மாற்றிக் கொண்டுள்ளது.

நடப்பு சாம்பியனான பெங்க ளூரு எப்சி, 2-வது இடம் பிடித்த கோவா எப்சி ஆகிய இரு அணி களும் கடந்த சீசனில் தங்களது தனித்துவமான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த் தது. தங்களது அணி வீரர்களை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ள இந்த இரு அணிக ளும் வலுவான போட்டியாளர் களாக இம்முறையும் களமிறங்கு கின்றன. அதேவேளையில் மற்ற அணிகளும் புத்திசாலித்தனமான வகையில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளன.

கொல்கத்தா அணியானது வெளிநாட்டு வீரர்கள் பலரை ஒப்பந்தம் செய்துள்ளது. கடந் தாண்டு கடைசி இடத்தில் இருந்த சென்னையின் எப்சி இந்த முறை புதிய மாற்றங்களுடன் வந் துள்ளது. சீசனுக்கு முந்தைய நட்பு ரீதியான ஆட்டங்களை பார்க்கும் போது சென்னையின் எப்சி அணி கடும் போட்டி தரக்கூடும் எனத் தெரிகிறது.

நடப்பு சாம்பியனான பெங்க ளூரு அணி எந்த பகுதியில் சரி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து 2 புதிய வீரர்களை சேர்த்துள்ளது. அகஸ்டோ குருனியன், ரபேல் அகஸ்டோ ஆகிய முக்கிய வீரர்கள் அந்த அணியில் இணைந்துள்ளனர். இதில் ரபேல் அகஸ்டோ கடந்த சீசனில் சென்னையின் எப்சி அணிக்காக விளையாடியிருந்தார். அதேவேளையில் குருனியன் புனே அணியில் இடம் பெற்றிருந்தார்.

கோவா அணி இம்முறை வெளிநாட்டு வீரர்கள் யாரையும் புதிதாக ஒப்பந்தம் செய்யவில்லை. அதேவேளையில் கடந்த சீசனில் விளையாடிய டிபன்டர் மோர்ட்டடா ஃபால், நடுகள வீரர் அகமது ஜாஹு, கோல்டன் பூட் விருது வென்ற ஃபெர்ரன் கொரோமினஸ் உள்ளிட்ட 6 வெளிநாட்டு வீரர்களை அப்படியே தக்கவைத்துக் கொண் டது. இந்தியாவிலிருந்து பிரெண் டன் ஃபெர்னாண்டஸ், மந்தர் ராவ் தேசாய், மன்வீர் சிங் உள் ளிட்டோரும் அசத்த காத்திருக் கின்றனர்.

நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியானது கானா நாட்டு வீரரான அசமோவா கியானை வளைத்துப் போட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள சுதர்லேண்டு அணிக்காகவும் விளையாடி உள்ள ஸ்டிரைக்கரான அசமோவா கியானை இம்முறை பெரிதும் நம்பியுள்ளது நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்.

கடந்த 2 சீசனில் ஏமாற்றம் தந்த கேரளா பிளாஸ்டர்ஸ் இம் முறை அசத்துவதற்காக பார்த்த லோமியூ ஓக்பெச்சை சேர்த் துள்ளது. கடந்த சீசனில் கோவா வின் கொரோமினசுக்கு அடுத்த படியாக அதிக கோல் அடித்தவர் ஓக்பெச். மும்பை எப்சி அணியில் இம்முறை மோடோ சோகோ உயர்மட்ட செயல்திறனை வெளிப் படுத்துவதில் முனைப்பு காட் டக்கூடும்.

அறிமுக அணிகளான ஹைத ராபாத் எப்சி, ஒடிசா எப்சி ஆகியவை குறுகிய காலத்தில் சிறப்பான அணிகளை உருவாக்கி யுள்ளன. இந்த சீசனில் பயிற்சி யாளர் களும் மாறியுள்ளனர். கேரளா பிளாஸ்டருக்கு மாறிய எல்கோ ஷட்டோரிக்கு பதிலாக ராபர்ட் ஜார்னியை நார்த் ஈஸ்ட் சேர்த் துள்ளது. 2014ல் கோப்பை வெல்ல காரணமாக இருந்த அன்டோனியோ ஹெபாஸை கொல்கத்தா அணி மீண்டும் பயிற்சியாளராக நிய மித்துள்ளது. அதேவேளையில் 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக பயிற்சி தந்து அனுபவம் பெற்ற அன்டோனியோ இரியோன் டோவை ஜாம்ஷெட்பூர் எப்சி தன் பக்கம் வளைத்துள்ளது.

சென்னையின் எப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் 23-ம் தேதி கோவா அணியை எதிர்கொள் கிறது. இந்த ஆட்டம் கோவாவில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x