Published : 19 Oct 2019 06:56 PM
Last Updated : 19 Oct 2019 06:56 PM

மரியாதையுடன் விலகிவிடுங்கள்- வலியுறுத்திய பாக். கிரிக்கெட் வாரியம் மறுத்த சர்பராஸ் அகமெட்

கராச்சி, பிடிஐ

டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் வீரராகவும் நீக்கப்பட்ட சர்பராஸ் அகமெட் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொடுத்த ஒரு வாய்ப்பை தைரியமாக நிராகரித்ததாக செய்திகள் வெளியாகின.

அதாவது 3 வடிவங்களிலிருந்தும் சர்பராஸ் அகமெட் தானாகவே விலக வேண்டும், என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை வலியுறுத்தியுள்ளது, ஆனால் அவர் முடியவே முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க சிஇஓ வாசிம் கானை வெள்ளியன்று சர்பராஸ் அகமெட் சந்தித்த போது மரியாதையுடன் விலகிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

அதற்கு சர்பராஸ் அகமெட், முடியவே முடியாது, வேண்டுமானால் கிரிக்கெட் வாரியம் என்னை நீக்கட்டும் என்று திட்டவட்டமாகக் கூறியதாக பாக். கிரிக்கெட் சங்க பெயர் கூற விரும்பாத உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை நீக்கியது, இதனையடுத்து டெஸ்ட் மற்றும் டி20க்கு மொகமது ரிஸ்வான் விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x