Published : 19 Oct 2019 03:04 PM
Last Updated : 19 Oct 2019 03:04 PM

சேவாக் பாணியில் சிக்சருடன் 6வது டெஸ்ட் சதமடித்தார் ரோஹித் சர்மா: டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள்

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் 39/3 என்று தடுமாறிய இந்திய அணியை ரோஹித் சர்மா தன் சதத்தினாலும் அஜிங்கிய ரஹானே தனது மீட்டெடுத்த ஆக்ரோஷ இன்னின்சினாலும் மீட்டு 206/3 என்று நிலைநிறுத்தினர்.

காலையில் அபாரமாக வீசிய ரபாடா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், அகர்வால் 10 ரன்களுக்கு கேட்ச் ஆக, புஜாரா அருமையான பந்தில் எல்.பி.ஆகி டக் அவுட் ஆகி வெளியேறினார், ரபாடா இந்த 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற விராட் கோலி 12 ரன்களில் வேகப்பந்து வீச்சாளர் நார்த்தியேவிடம் எல்.பி ஆகி வெளியேறினார், ஒருவழியாக நடுவர் கோலிக்கு அவுட் கொடுத்தார், இது லெக் ஸ்டம்பை அடிக்கும் என்று ரீப்ளேயில் காட்டியது, ஒருவேளை நடுவர் நாட் அவுட் என்றிருந்தாலும் அம்பயர்ஸ் கால் ஆகியிருக்கும், இந்த முறை ஒரு சேஞ்சுக்கு கோலி ரிவியூ செய்ய அம்பயர்ஸ் கால் ஆனது. வெளியேறினார். இரண்டு பந்துகளைக் குத்தி வெளியே எடுத்த நார்த்தியே ஒரு பந்தை உள்ளே கொண்டு வர தவறான லைனில் ஆடி வெளியேறினார் கோலி.

39/3 என்ற நிலையில் சேர்ந்த ரோஹித் சர்மாவும், ரஹானேவும் உணவு இடைவேளையின் போது 71/3 என்று மேலும் சரிவில்லாமல் நிறுத்தினர்.

ஒரு முனையில் அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா 8 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் அரைசதம் கடந்தார். இதற்கு 86 பந்துகள் எடுத்துக் கொண்டார், சூழ்நிலையைப் பார்க்கும் போது கொஞ்சம் விரைவாகத்தான் அவர் ஆடியிருக்கிறார். உணவு இடைவேளைக்குப் பிறகு ரஹானே 64 ரன்களை 10 பவுண்டரிகளுடன் அடிக்க 62 ரன்களை ரோஹித் சர்மா அடித்து 130பந்துகளில் 13 பவுண்டரிகள் 4 சிச்கர்களுடன் வெளுத்துக் கட்டி 6வது டெஸ்ட் சதத்தையும் தொடரில் 3வது சதத்தையும் எடுத்தார்.

டீன் பியட் பந்தை சிக்ஸருக்கு சேவாக் பாணியில் தூக்கி அவர் பாணியில் சிக்சரில் சதம் அடித்தார். இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 128 பந்துகளில் 100 ரன்களையும் பிறகு 188 பந்துகளில் 150 ரன்களையும் சேர்த்தனர்.

விரைவு கதி ரன்குவிப்பாகும் இது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 2000 ரன்களைக் கடந்து சென்றார்.

ரோஹித் சர்மா தற்போது 111 ரன்களுடனும், அஜிங்கிய ரஹானே 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 83 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் மஹராஜுக்கு பதில் ஆடும் லிண்டே, பியட் சேர்ந்து 17 ஓவர்களில் 83 ரன்களை விட்டுக் கொடுத்தனர், இங்குதான் தென் ஆப்பிரிக்காவின் பலவீனம் பெரிய அளவில் இருக்கிறது, ஏன் பிலாண்டரை உட்கார வைக்க வேண்டும்?

இந்திய அணி தற்போது 224/3 என்று உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x