Published : 19 Oct 2019 09:19 AM
Last Updated : 19 Oct 2019 09:19 AM

டாஸ் வென்றார் விராட் கோலி: இந்தியா, தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றங்கள்: ஆடுகளம் எப்படி?

ராஞ்சி

ராஞ்சியில் இன்று தொடங்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்துள்ளது

தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்துவீச்சாளர் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஷான்பாஸ் நதீம் அறிமுகமாகியுள்ளார். இசாந்த் சர்மாவுக்கு பதிலாக ஷான்பாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார் முகமது ஷமி, உமேஷ் யாதவ் இரு வேகப்பந்துவீச்சாளர்களுடன் மட்டும் களமிறங்குகிறது.

அதேபோல தென் ஆப்பிரிக்க அணியில் காயம் காரணமாக எய்டன் மார்க்ரம் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கிளாசன், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஜார்ஜ் லிண்டே அறிமுகமாகியுள்ளார். 5 ஸ்பெலிஸ்ட் பந்துவீச்சாளர்களுடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

ஆடுகளம் எப்படி
ராஞ்சி ஆடுகளத்தில் ஏராளமான பிளவுகளும், புற்களும் காணப்படுவதால் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும். காலை நேரத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் நன்றாக ஸ்விங் செய்யும் பட்சத்தில் இந்திய அணியின் விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்த முடியும்.

பேட்ஸ்மேன்களுக்கு வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு பேட் செய்வது கடினமாகத்தான் இருக்கும். கடந்த 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய வந்தபோது இருந்த ஆடுகளம் போல் இருப்பதால், பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்ப்பது கடினமாக இருக்கும்.

அதேசமயம், இரு நாட்களுக்குப்பின் பந்துகள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார்போல் நன்கு டர்ன் ஆகும். ஒட்டுமொத்தத்தில் பேட்டிங்கிற்கு சாதகமில்லாத மைதானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x