

புதுடெல்லி
ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவர், மகளிர் அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
2020-ல் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒலிம்பிக் போட்டியின் ஹாக்கி விளையாட்டில் பங்கேற்கும் அணி தகுதிப் போட்டி மூலம் தேர்வு செய்யப்படும்.
இந்தப் போட்டியில் பங்கேற் கும் இந்திய ஆடவர், மகளிர் அணிகளை நேற்று ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள் ளது. இந்த அணிகள் ஒடிசாவில் நடைபெறும் 2 கட்ட தகுதிப் போட்டியில் பங்கேற்கும்.
இதுகுறித்து ஆடவர் அணி தலைமைப் பயிற்சியாளர் கிரஹாம் ரீட் கூறும்போது, “பெல்ஜிய சுற்றுப்பயணத்தின் போது நடைபெற்ற பயிற்சிப் போட்டிகள் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்தன. இப் போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணி அனைத்து வகையிலும் சம பலத்துடன் உள்ளது” என்றார்.
அணி விவரம்
ஆடவர்: மன்பிரீத் சிங் (கேப்டன்), பிஆர் ஜேஷ், கிருஷண் பகதூர் பதக், ஹர் மன்பிரீத் சிங், வருண் குமார், சுரேந்தர் குமார், குரீந்தர் சிங், ரூபிந்தர் பால் சிங், அமித் ரோஹிதாஸ், நீலகண்ட சர்மா, ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், லலித் குமார் உபாத்யாய், எஸ்.வி.சுனில், மன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், ரமன்தீப் சிங், சிம்ரன்ஜீத் சிங்.
மகளிர்: ராணி ராம்பால் (கேப்டன்), சவிதா, ரஜனி எட்டி மார்ப்பு, தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், ரீனா கோக்கர், சலீமா டெட்டே, சுசீலா சானு புக்ரம்பம், நிக்கி பிரதான், மோனிகா, நேஹா கோயல், லில்லிமா மின்ஸ், நமிதா டாப்போ, வந்தனா கட்டாரியா, நவ்நீத் கவுர், லால்ரேம்சியாமி, நவ்ஜோத் கவுர், ஷர்மிளா தேவி.