Published : 19 Oct 2019 08:57 AM
Last Updated : 19 Oct 2019 08:57 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டையும் வெல்லும் முனைப்பில் இந்திய அணி: ராஞ்சியில் இன்று தொடக்கம்

ராஞ்சி

இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கவுள்ளது. ஏற்கெனவே 2 டெஸ்ட் போட்டிகளையும் வென்ற நிலையில் கடைசி டெஸ்டையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டை 203 ரன்கள் வித்தி யாசத்திலும், புனேவில் நடைபெற்ற 2-வது டெஸ்டை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங் கவுள்ளது. இந்த டெஸ்டையும் வென்று முழுமையாக தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்ற இந்திய அணி ஆர்வத்துடன் களமிறங்குகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், கேப்டன் விராட் கோலி, புஜாரா, ரஹானே, ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார்கள்.

முதல் டெஸ்டின் 2 இன்னிங்ஸ் களிலும் ரோஹித் சதமடித்தார். அதைப் போலவே 2-வது டெஸ்ட் போட்டியில் கோலி ஆட்டமிழக் காமல் 254 ரன்கள் குவித்தார். 2 டெஸ்ட் போட்டிகளிலும் மயங்க் அகர்வால் சதமடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இதனால் இந்திய அணியின் பேட்டிங்கை சமாளிப்பது தென் ஆப்பிரிக்க அணிக்கு கடினமாக இருக்கும். அதைப் போலவே பவு லிங்கிலும் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின், ஜடேஜா, மொக மது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தென் ஆப்பிரிக்க அணியை கடந்த 2 டெஸ்ட் போட்டி களிலும் கட்டுக்குள் வைத்தனர்.

அவர்களது சிறப்பான பந்துவீச்சு கடைசி டெஸ்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக் கான தொடர் என்பதால் புள்ளிகள் கணக்கும் இந்தியாவுக்கு கூடும். 3-0 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றினால் போன ஸாக 40 புள்ளிகள் இந்திய அணிக்கு கிடைக்கும்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி யில் ஷாபாஸ் நதீம் இடம்பெறுவார். மாறாக தென் ஆப்பிரிக்க அணியோ ஆறுதல் வெற்றியை எதிர்பார்த்துக் களமிறங் குகிறது. அந்த அணியின் பேட்டிங் வலுவான நிலையில் இல்லை. கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், எய்டன் மார்கிரம், டீன் எல்கர், குயிண்டன் டி காக் ஆகியோர் தொடர்ச்சி யாக சீரான ஆட்டத்தை வெளிப் படுத்தவில்லை.

பவுலிங்கில் காகிசோ ரபாடா, வெர்னான் பிலாண்டர், அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தங்களது திறமையான பந்துவீச்சை வெளிப் படுத்தக் காத்திருக்கின்றனர்.

அணி விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேத்தேஸ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விகாரி, விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷாபாஸ் நதீம், ரவீந்திர ஜடேஜா, மொகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த், சுப்மான் கில்.

தென் ஆப்பிரிக்கா: டூ பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), டெம்பா பவுமா, தெனுயிஸ் டி புருயின், குயிண்டன் டி காக், டீன் எல்கர், ஜுபாயர் ஹம்சா, ஜார்ஜ் லிண்டே, செனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ட்ஜே, வெர்னான் பிலாண்டர், டேன் பீட், காகிசோ ரபாடா, ரூடி செகன்ட்.ஆட்டத்தை காண தோனி முடிவு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, ராஞ்சியில் நடைபெறும் 3-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தைக் காண்பார் என்று அவரது மேலாளர் மிஹிர் திவாகர் தெரிவித்தார்.

ராஞ்சி, எம்.எஸ்.தோனியின் சொந்த ஊர் என்பதால் டெஸ்ட் போட்டியைக் காண அவர் வருகை தருகிறார் என்று மிஹிர் தெரிவித்தார்.. டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டார். அவர் தற்போது டி20, ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x