Published : 18 Oct 2019 07:42 PM
Last Updated : 18 Oct 2019 07:42 PM

ராஞ்சி டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கு தோனி வருகை: இந்திய அணிக்கு பண்ணை வீட்டில் விருந்து

ராஞ்சி, பிடிஐ

சனிக்கிழமை தொடங்கவுள்ள இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை பார்க்க தோனி வருகை தருகிறார் என்ற தகவலை அவரது மேலாளர் மிஹிர் திவாகர் உறுதி செய்துள்ளார்.

ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க தலைவர் நபீஸ் கான், தோனி குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தோனியின் மேலாளர் மிஹிர் திவாகர் கூறும்போது, “மாஹி (தோனி) நிச்சயம் நாளை வருகிறார், மைதானத்துக்கு வந்து முதல்நாள் ஆட்டத்தை நேரில் பார்வையிடுகிறார். நாளை காலை இதற்காக மும்பையிலிருந்து தோனி வருகிறார்” என்று பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தார்.

குடும்பத்துக்கு அழைப்பு விடுத்தாலும் தோனி தனியாகவே வருகிறார் என்றும் இந்திய அணி தோனியின் ராஞ்சி புறநகர்ப்பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இரவு விருந்தில் கலந்து கொள்கின்றனர் என்பதையும் மிஹிர் திவாகர் தெரிவித்தார்.

2 ஆண்டுகளுக்கு முன்பாக ஹர்முவிலிருந்த தன் வீட்டைக் காலி செய்து விட்டு ராஞ்சியிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள சிமாலியா பண்ணை வீட்டில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

உலகக்கோப்பைக்குப் பிறகு ராணுவ சேவை புரியச் சென்ற தோனி தன் கிரிக்கெட் முடிவுகள் பற்றி இதுவரை எதுவும் அறிவிக்காத நிலையில் மேனேஜர் மிஹிர் திவாகர் கூறும் போது, “கிரிக்கெட் குறித்த அனைத்து முடிவுகளையும் தோனியே எடுப்பார். அவர் என்ன முடிவெடுப்பார் என்பது அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து எப்படி விலகினார் என்பதை நீங்களே பார்த்தீர்கள், எனவே அவரை வைத்து எதையும் கணித்து விட முடியாது. அவரிடம் ஒரேமாதிரியைக் கேள்வியை நாங்களும் கேட்டுக் கொண்டிருந்தால் பொதுமக்களுக்கும் நண்பர்களுக்கும் பிறகு என்ன வித்தியாசம் இருக்க முடியும்?” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x