Published : 18 Oct 2019 04:57 PM
Last Updated : 18 Oct 2019 04:57 PM

பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை மீண்டும் நியமித்திருக்க கூடாது: பழைய பகையை தீர்க்கிறாரா கங்குலி ?

கொல்கத்தா

இந்திய அணியின் தலைமைப் பயிறச்சியாளராக ரவிசாஸ்திரியை மீண்டும் நியமித்து இருக்கக் கூடாது என்று பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட உள்ள சவுரவ் கங்குலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கங்குலிக்கும், ரவி சாஸ்திரிக்கும் இடையே நட்புறவு சீராக முன்பிருந்தே இருந்ததில்லை என்பதை கங்குலி தனது ஒற்றைக் கருத்து மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணிக்கு முதல்முறையாக ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக தேர்வு செய்த குழுவில் சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகிய 3 பேர் இருந்தனர்.

இவர்கள்தான் ரவி சாஸ்திரியை தேர்வு செய்து பிசிசிஐக்கு பரி்ந்துரை செய்தனர். ஆனால், பயிற்சியாளர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தவர்களை தேர்வுக்குழுவில் சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகிய 3 பேரும் நேரடியாக வரவழைத்து நேர்காணல் செய்தனர்.

ஆனால் ரவி சாஸ்திரியை அழைத்தபோது, தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், தன்னால் உடனடியாக வரமுடியாது, தேவைப்பட்டால், வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நேர்காணல் நடத்தலாம் என்று தெரிவித்தார்.

இந்த கருத்து சர்ச்சையாகி, பதிலுக்கு கங்குலியும் காட்டமாகத் பேசினார். அதன்பின் இந்தவிவகாரத்தில் நேர்காணல் முடிந்து ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக இந்த 3 பேரும் தேர்வு செய்தார்கள். ஆனால் ரவிசாஸ்திரியை நேர்காணல் செய்யும் அன்று கங்குலி வராமல் தவிர்த்துவிட்டார். கங்குலியின் செயல் அவமரியாதைக்குரியது என்று ரவி சாஸ்திரி தெரிவித்ததால் பெரும் சர்ச்சையானது.

அப்போது இருந்தே ரவி சாஸ்திரிக்கும், கங்குலிக்கும் இடையே நட்புறவு சரியாக இல்லை என்பதை கங்குலி சிறிய கருத்து மூலம் தெரிவித்துவிட்டார்.

பிசிசிஐ தலைவர் கங்குலி நிருபர்களுக்கு கொல்கத்தாவில் பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம், ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து கருத்துக் கேட்டனர். அதற்கு கங்குலி பதில் அளிக்கையில், " இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை மீண்டும் தேர்வு செய்திருக்கக் கூடாது. அதேசமயம், பாரபட்சமாக அவரை தேர்வு செய்துவிட்டார்கள் என்றும் நான் நினைக்கவில்லை. அதுகுறித்து உறுதியாக ஏதும் தெரியாது. முரண்பாடுகள் இருந்தபோதே மீண்டும் தலைமைப்பயிற்சியாளராக அவரைத் தேர்வுசெய்துள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டபின் ரவி சாஸ்திரியுடன் பேசினார்களா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு கங்குலி, " ஏன் நான் ரவி சாஸ்திரியிடம் பேசக்கூடாது. இப்போது அவர் என்ன செய்துவிட்டார். முதலில் ஊகத்தின் அடிப்படையில் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். இரண்டாவது, ஒழுங்கு நெறிமுறை அதிகாரியின் முடிவை நான் பாரபட்சமானது என்று கூறுவது எனக்கு நேர்மையாகத் தெரியவில்லை" எனத் தெரிவித்தார்

ஆனால், ரவி சாஸ்திரி நியமனம் குறித்து சிஓஏ தலைவர் வினோத் ராயிடம் சமீபத்தில் நிருபர்கள் கேட்டபோது, இந்த விஷயத்தில் தன்னால் கருத்து தெரிவிக்க இயலாது எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, மகளிர் அணியின் பயிற்சியாளர் டபிள்யு ராமன் ஆகியோரை கபில்தேவ், கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழுதான் தேர்வு செய்தனர்.

ஆனால் இந்த குழுவில் இருந்த 3 பேரும் இரட்டை ஆதாயப் பதவி விகித்துள்ளதாக நெறிமுறை அதிகாரி டி.கே. ஜெயின் நோட்டீஸ் அனுப்பினார். இதனால், 3 பேரும் பதவி விலகினார்கள்.

இந்த குழுவினர் நியமனமே நேர்மையற்ற முறையில் இருக்கும்போது, அவர்களின் நியமனத்தை எவ்வாறு ஏற்பது என்ற கேள்வி எழுந்தது. அதை நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயின் முடிவு செய்வார் எனத் தெரிவிக்ககப்பட்டது. ஒருவேளை நியமனம் செல்லாது என நெறிமுறை அதிகாரி தெரிவித்தால், ரவி சாஸ்திரி, டபிள்யு வி ராமன் நியமனம் செல்லாததாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நெறிமுறை அதிகாரி என்ன முடிவு எடுப்பார் என்பது இதுவரை தெரியவில்லை.

, ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x