Published : 18 Oct 2019 04:12 PM
Last Updated : 18 Oct 2019 04:12 PM

9-க்கு-9 : விஜய் ஹஜாரே டிராபியில் தினேஷ் கார்த்திக் தலைமை தமிழ்நாடு அணி பிரமாதம்

உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் சீரான முறையில் வெற்றிகளைக் குவிக்கும் அரிதான அணிகளில் ஒன்றாக தமிழ்நாடு அணி தினேஷ் கார்த்திக் தலைமையில் நடப்பு விஜய் ஹஜாரே டிராபியில் 9 போட்டிகளில் 9-ஐயும் தொடர்ச்சியாக வென்று உற்சாக மனநிலையில் உள்ளது.

தமிழ்நாடு அணியிடம் கடைசியாக தோல்வி அடைந்தது குஜராத் அணி. 50 ஓவர்களில் தமிழ்நாடு அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்ததில் அபினவ் முகுந்த் 79 ரன்களையும் டெஸ்ட் அனுபவசாலி முரளி விஜய் 94 ரன்களையும் வாஷிங்டன் சுந்தர் 42 ரன்களையும் எடுக்க குஜராத் அணி 196 ரன்களுக்குச் சுருண்டது.

78 ரன்களில் பெற்ற இந்த வெற்றியின் மூலம் விஜய் ஹஜாரே டிராபியில் 9 போட்டிகளில் தமிழ்நாடு 9-லும் வெற்றி பெற்று மிகச்சீரான ஒரு அணியாகத் திகழ்ந்து வருகிறது., ,

விக்கெட்வாரியாகப் பார்த்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுதான் அதிக விக்கெட்டுகளை இழந்த இன்னிங்ஸ் ஆகும். 2 போட்டிகள்ல் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இன்னும் 2 போட்டிகளை 200 ரன்களுக்கும் மேலான இடைவெளியில் வென்றது. இத்தனைக்கும் தமிழ்நாடு அணி ஆடும் சி பிரிவு உயர்மட்ட பிரிவாகும்.இந்தப் பிரிவில்தான் முன்னாள் சாம்பியன் அணிகள் 2 உள்ளன.

நீண்ட காலத்தில் ஒரு அணி உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு அணி இத்தனை ஆதிக்கம் செலுத்தி ஆடியதில்லை. புதிய வீரர் ஷாரூக் கான் இந்தத் தொடரில் தமிழ்நாடு கண்டுபிடித்த அற்புத அதிரடி வீரர் ஆவார். தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சி பிரமாதமாக அமைந்ததோடு பேட்டிங்கிலும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். டாப் 6 பேட்ஸ்மென்களில் ஒரேயொரு வீரர்தான் 47.50 என்ற சராசரிக்கும் கீழ் இந்தத் தொடரில் வைத்துள்ளார். அந்த வீரர் ஹரி நிஷாந்த் ஆனால் இவரும் கூட ஒரு போட்டியில் 71 பந்துகளில் 73 ரன்கள் என்ற இன்னிங்சை ஆடினார்.

முரளி விஜய், அபினவ் முகுந்த் தொடங்க பாபா அபராஜித், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ஷாரூக்கான், வாஷிங்டன் சுந்தர் என்று பேட்டிங் வலுவாக அமைய பவுலிங்கில் முருகன் அஸ்வின், வேகப்பந்து வீச்சில் விக்னேஷ், எம்.மொகமது தலா 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இடது கை ஸ்பின்னர் சாய் கிஷோர் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

எனவே 9-க்கு-9 என்ற வெற்றியின் பின்னணியில் ஒரு அணியாகத் திரண்டு தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சியில் ஆடியது பெரிய அளவில் உதவியுள்ளது என்று தெரிகிறது.

காலிறுதி அக்.20ம் தேதி தொடங்குகிறது.

-பி.கே.அஜித் குமார், தி இந்து ஸ்போர்ட்ஸ்டார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x