Published : 18 Oct 2019 03:03 PM
Last Updated : 18 Oct 2019 03:03 PM

பாக்.டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன்சியிலிருந்தும் அணியிலிருந்தும் சர்பராஸ் அகமெட் நீக்கம்: மிஸ்பா அதிரடி 

நவம்பர்-டிசம்பர் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரை விளையாடவிருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன்சியிலிருந்து சர்பராஸ் அகமெட் நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் இரு வடிவங்களிலும் சர்பராசின் மோசமான பார்ம் காரணமாக அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார், இவருக்குப் பதிலாக அசார் அலி டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், பாபர் ஆஸம் டி20 கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சர்பராஸ் அகமெட் பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பார். சர்பராஸ் கேப்டன்சியில் பாகிஸ்தான் டெஸ்ட் அணி எழும்பவில்லை. தரவரிசையில் 7ம் இடத்தில் இருக்கிறது. டி20யில் சமீபமாக இலங்கையின் முக்கிய வீரர்கள் இல்லாத அணியிடம் சொந்த மண்ணில் 3-0 என்று தோல்வி கண்டது, இதனையடுத்து பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் முதல் அனைவரும் சர்பராஸ் அகமெட் மீது பாய்ந்தனர்.

அதே போல் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவில் 3-0 என்றும் துபாயில் நியூஸிலாந்துக்கு எதிராக 2-1 என்றும் தோல்வி கண்டது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓரளவுக்கு நன்றாக ஆடியதும் அதன் பிறகு இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரிலும் சர்பராஸ் தலைமை பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் சர்பராஸ் அகமெடின் ஒருநாள் கேப்டன்சியைத் தக்கவைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x