ஆஷஸ்: வாட்சன், ஹேடின் இல்லை; ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஷஸ்: வாட்சன், ஹேடின் இல்லை; ஆஸ்திரேலியா பேட்டிங்
Updated on
1 min read

ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற மைக்கேல் கிளார்க் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியில் மாற்றங்கள் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் பிராட் ஹேடினுக்குப் பதிலாக பீட்டர் நெவில் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட, 'எல்.பி.டபிள்யூ' வாட்சன் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் வேறு மாற்றங்கள் இல்லை. மைக்கேல் கிளார்க் கடந்த 24 இன்னிங்ஸ்களில் இருமுறையே அரைசதம் கடந்துள்ளார், அவர் மீதும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மற்றும் அணித் தேர்வுக்குழுவுனருக்கு ஒரு கண் உள்ளது. மிட்செல் ஜான்சன் முதல் டெஸ்டில் சோபிக்கவில்லை, டேவிட் வார்னர், ஸ்மித் என்று அனைவரது ஆட்டமும் கடும் நெருக்கடி நிலையில் உள்ளன.

காரணம், முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து சாதாரணமாக வென்றதே. பிராட் ஹேடின் கேட்ச் விட்ட போது கார்டிப்பில் சதநாயகன் ஜோ ரூட் ரன் எடுக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சதம் கண்டார். கேட்சைப் பிடித்திருந்தால் இங்கிலாந்து 200 ரன்களுக்குக் கூட மடிந்திருக்கலாம், ஆட்டத்தின் முடிவே கூட மாறியிருக்கலாம்.

ஒரு கேட்ச்தானே, கேட்ச் விடுவதெல்லாம் ஒரு விஷயமா என்று பார்க்காது ஆஸ்திரேலியா. அதே போல் ஒரு பேட்ஸ்மென் தொடர்ந்து ஒரே மாதிரி ஆட்டமிழந்தால் அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்புவதும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வழக்கம். இப்படித்தான் ஷேன் வாட்சன் தன் இடத்தை இழந்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 6 ரன்களுடனும், கிறிஸ் ராஜர்ஸ் 21 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in