

சென்னை
நடப்பாண்டில் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னை எப்சி அணி பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்று அந்த அணி வீரர் ஆந்த்ரே செம்ப்ரி நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையின் எப்சி அணி நிர்வாகத்துடன், இணைந்து பணி புரிய அலுவலக இடமளிப்பு சேவையை உலகம் முழுவதும் வழங்கி வரும் வொர்க் கஃபெல்லா நிறுவனம் கை யெழுத்திட்டுள்ளது. நிகழ்ச்சியில் சென்னையின் எப்சி அணி தலைமை பயிற்சியாளர் ஜான் கிரெகோரி, வீரர் ஆந்த்ரே செம்ப்ரி, வொர்க்காஃபெல்லா நிறுவன இணை நிறுவனர், இயக்குநர் ஷிரே ரத்தா, தலை மைச் செயல் அதிகாரி வினோத் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிருபர்களிடம் ஆந்த்ரே செம்ப்ரி கூறும்போது, “ஐஎஸ்எல் 6-வது சீசன் கால் பந்துப் போட்டிகள் அக்டோபர் 20-ம் தேதி தொடங்கவுள்ளன. போட்டிக்காக அனைத்து வீரர் களும் சிறப்பான பயிற்சியை எடுத்து வருகிறோம். இந்த முறை கோப்பையை வெல்வது என்ற தெளிவான இலக்குடன் உள்ளார். இந்த இலக்கை அடைய வீரர்கள் அனைவரும் எதையும் செய்யத் தயாராக உள்ளோம். நடப்பாண்டில் கோப்பை சென்னையின் எப்சி அணிக்கே கிடைக்கும்” என்றார்.
ஆந்த்ரே செம்ப்ரி பாரம்பரிய மான கால்பந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் தாத்தா சால்வினு செம்ப்ரி மால்டா தேசிய கால்பந்து அணியின் முதல் கேப்டன் என்ற பெருமை யைப் பெற்றவர்.
பிடிஐ