Published : 16 Oct 2019 08:45 PM
Last Updated : 16 Oct 2019 08:45 PM

‘அணியில் சேர்க்கப்படாததற்கு காரணம் சொன்னார்களா?’, பிறகு கூறுகிறேன்..:  வெறுப்பில் குல்தீப் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணித்தேர்வுக்குழு விசித்திரமானது, திடீரென சாஹல், குல்தீப் உலகத்தரம் என்று கூறும் பிறகு அவர்களை 2 தொடர்களுக்கு உட்கார வைக்கும், அஸ்வின், ஜடேஜாதான் உலகின் பிரமாதம் என்பார் கோலி, ஆனால் இவர்களையும் உட்கார வைப்பார். புவனேஷ்வர் குமார் அற்புதம் என்பார் ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரை உட்கார வைப்பார், உமேஷ் யாதவ் போல் வருமா என்பார், இந்தியத் தொடருக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்படுவார்.

இந்த நடைமுறைகளுக்குப் பின்னணியில் எந்த ஒரு அறிவார்த்த தர்க்கமும் இருப்பதாகத் தெரியவில்லை மாறாக தங்களுக்கு நெருக்கமான வட்டத்தில் இல்லாதவர்களை எப்போதும் ஒரு பாதுகாப்பற்ற நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதே.

இந்த நிலையில் சிக்கியுள்ள குல்தீப் யாதவ், தன் கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போதைய காலக்கட்டம்தான் மிகவும் நெருக்கடியும் சவால் நிரம்பிய காலக்கட்டமாகும் என்று கூறியுள்ளார்.

“நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய காலங்களில் நான் இந்திய அணியில் ஆடுவேன் என்று எதிர்பார்த்ததில்லை, இப்போது சுமார் 3 ஆண்டுகளாக இந்திய அணிக்கு ஆடுகிறேன். இப்போது நான் எதிர்கொண்டு வரும் சூழ்நிலை போல் பல சவால்களைச் சந்தித்து வருகிறேன்.

ஒழுக்கமும் கடின உழைப்பும் என்னை நகர்த்திச் செல்கின்றன. தொடர்ந்து இதுதான் என் அணுகுமுறையாக இருக்கும்” என்றார்.

சரி. உங்களையும், சாஹலையும் டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யவில்லையே, தேர்வுக்குழுவோ அணி நிர்வாகமோ அதற்கான காரணங்களை உங்களிடம் தெரிவித்தார்களா என்று பிடிஐ சார்பாக கேட்கப்பட்ட போது, "டெஸ்ட் தொடர் முடியட்டும் இதைப்பற்றி பேசுகிறேன்” என்றார் முத்தாய்ப்பாக.

-பிடிஐ தகவல்களுடன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x