Published : 16 Oct 2019 08:29 PM
Last Updated : 16 Oct 2019 08:29 PM

எல்லோரையும் போல்தான் நானும் களத்தில் கோபமும் வெறுப்பும் அடைந்துள்ளேன் - தோனி ஒப்புதல்

மும்பை, ஐ.ஏ.என்.எஸ்.

கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி அமைதிக்குப் பெயர் பெற்றவர், தோனி என்றால் அமைதி, அமைதி என்றால் தோனி என்று பெயரெடுத்தவர். ஆனால் தனக்கும் களத்தில் கோபமும் வெறுப்பும் ஏற்பட்ட தருணங்கள் உண்டு என்று கூறியுள்ளார்.

ஆனால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டேன் என்றும் தெரிவித்தார் தோனி.

மும்பையில் ’மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தின் ’மாஸ்டர்கார்டு டீம் கேஷ்லெஸ் இந்தியா' நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி, “நானும் களத்தில் கோபம், ஏமாற்றம், வெறுப்பு அடைந்துள்ளேன். ஆட்டம் நமக்குச் சாதகமாகப் போகாத தருணங்களில் நானும் எரிச்சலடைந்துள்ளேன். ஆனால் அதை எப்படி ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்பதில்தான் விஷயம் உள்ளது. அதாவது நம் வெறுப்பும் ஏமாற்றமும் நம் முடிவை அணிக்கு தவறு செய்வதில் போய் முடிந்து விடக்கூடாது.

நானும் உணர்ச்சிவயப்பட்டுள்ளென், கோபமாடைந்துள்ளேன், சில வேளைகளில் ஏமாற்றமடைந்துள்ளேன், ஆனால் முக்கியமானது என்னவெனில் இவையெல்லாம் ஆக்கப்பூர்வமானவை அல்ல.

அந்தத் தருணங்களில் என்ன செய்ய வேண்டுமோ அதுதான் முக்கியமே தவிர உணர்வுகள் முக்கியமல்ல. நானும் எல்லோரையும் போல்தான் ஆனால் நான் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வேன், சில மற்ற தனிமனிதர்களை விட நான் கொஞ்சம் இதில் பெட்டர்.

இவ்வாறு கூறினார் தோனி.

மும்பையில் நடைபெற்ற மாஸ்டர்கார்டின் ‘மாஸ்டர்கார்டு டீம் கேஷ்லெஸ் இந்தியா’ என்ற அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தோனி இவ்வாறு பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x