தன் இன்ஸ்டாகிராம் பக்கமும் ஹேக்: பதறிய ஷேன் வாட்சன்

தன் இன்ஸ்டாகிராம் பக்கமும் ஹேக்: பதறிய ஷேன் வாட்சன்
Updated on
1 min read

ட்விட்டர் பக்கத்தைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கமும் ஹேக் செய்யப்பட்டதால் ஷேன் வாட்சன் மிகவும் வருத்தத்தில் உள்ளார்.

பிரபலங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களை ஹேக் செய்து, அதில் விளையாடுவது வழக்கமான ஒன்றாகி வருகிறது. தினமும் ஏதேனும் ஒரு பிரபலம் தனது சமூக வலைதளம் ஹேக் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஷேட் வாட்சனின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. அவரது புகைப்படம் நீக்கப்பட்டு, ரசிகர்களுடைய பதிவுகள் ரீ-ட்வீட் செய்யப்பட்டனர். இந்த திடீர் செயலால், ஷேன் வாட்சனின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது உறுதியானது.

சில மணித்துளிகளிலேயே அவரது ட்விட்டர் பக்கம் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. அதில் சில ஆபாச புகைப்படங்களை ரசிகர்கள் பதிவேற்றியுள்ளனர். இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடந்த செயல்கள் குறித்து ஷேன் வாட்சன் தனது ட்விட்டர் பதிவில், "வெள்ளிக்கிழமை அன்று எனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்ட போது, ட்விட்டர் தளம் அதை மிக விரைவாக மீட்க உதவியது. ஆனால், எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீட்க முடியவில்லை. இன்ஸ்டாகிராம் எங்கே?

எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஆபாச புகைப்படங்களுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இது போன்று நடக்கும் போது இன்ஸ்டாகிராம் பக்கம் மிக விரைந்து செயல்பட வேண்டும். ஆனால், நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார் ஷேன் வாட்சன்.

ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஓய்வு பெற்ற ஷேன் வாட்சன், ஐபில் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதனால் அவருக்குத் தமிழகத்தில் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in