Published : 15 Oct 2019 06:34 PM
Last Updated : 15 Oct 2019 06:34 PM

என்னை ஒரு முட்டாள் என்றார் ஜஸ்டின் லாங்கர்: மிட்செல் மார்ஷ் 

கடந்த ஞாயிறன்று பெர்த் மைதானத்தின் ஓய்வறைச் சுவரைக் கையால் குத்தி காயம் பட்டுக் கொண்ட மிட்செல் மார்ஷ் 6 வாரங்களுக்கு கிரிக்கெட் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் மிட்செல் மார்ஷ் ஆட மாட்டார்.

இந்தச் சம்பவத்துக்கு மிட்செல் மார்ஷ் தற்போது வருத்தம் தெரிவித்துக் கூறுகையில், “நான் அடிப்படையில் ஒரு முட்டாள் என்று பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் என்னிடம் கூறினார். அவர் என் மீதான கடும் ஏமாற்றத்தில் இதைக் கூறினார். இது தனிப்பட்ட சம்பவம் இனி இப்படி ஒரு போதும் நடக்காது.

சுவரைப்போய் குத்து விடுவது என்பது என் குணாதிசியத்தில் இல்லாத ஒன்று. அது நல்ல நடத்தையுமன்று, நான் எதையுமே சுலபமாக எடுத்துக் கொள்பவன், அடுத்த 6 வாரங்களுக்கு அணியின் பயணத்தில் நான் பங்கு பெறாததை நினைத்து நான் கடுமையாக ஏமாற்றமடைந்தேன். அணியின் சகவீரர்களையும் கைவிட்டு விட்டேன். நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், நிச்சயமாக இது போன்ற தவறான உதாரணமாக நான் ஆகவிரும்பவில்லை.

ஆனாலும் அவர்கள் என் பக்கமே உள்ளனர், என்னை நேசிக்கின்றனர் என்றார் மிட்செல் மார்ஷ்.

மேற்கு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ், சமீபத்தில் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் டாஸ்மேனியா அணிக்கு எதிராக 53 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து கோபத்தில் மைதான ஓய்வறைச் சுவற்றை கையால் ஓங்கிக் குத்தி காயமடைந்தார என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x