Published : 15 Oct 2019 04:25 PM
Last Updated : 15 Oct 2019 04:25 PM

இன்னும் ஒரு 1 புள்ளிதான்: ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ள கோலிக்கு வாய்ப்பு

புனேயில் தென் ஆப்பிரிக்க அணியை இன்னிங்ஸ் தோல்வியடையச் செய்த கேப்டன் விராட் கோலியின் 254 ரன்கள் அபார இன்னிங்ஸை அடுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் புள்ளிகளில் இந்திய கிரேட் கோலி 936 புள்ளிகளுடன் ஆஸி. கிரேட் ஸ்டீவ் ஸ்மித்தைக் காட்டிலும் ஒரு புள்ளிதான் குறைவாக உள்ளார்.

அக்.19ம் தேதி தென் ஆப்பிரிக்க அணியுடன் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆடும் போது கோலி, ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் உயர்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதே போல் ரவிச்சந்திரன் அஸ்வின் 10ம் இடத்திலிருந்து 7ம் இடத்துக்கு பந்து வீச்சு தரவரிசையில் முன்னேறியிருக்கிறார். வெர்னன் பிலாண்டர் தற்போது 8ம் இடத்தில் இருக்கிறார்.

மயங்க் அகர்வால் இரட்டைச் சதம், சதம் என தொடர் சதங்களுடன் 17ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய உமேஷ் யாதவ் 25ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x