Published : 15 Oct 2019 09:44 AM
Last Updated : 15 Oct 2019 09:44 AM

ஆண்டுதோறும் டி 20 உலகக் கோப்பை நடத்த பிசிசிஐ எதிர்ப்பு

மும்பை 

ஒவ்வொரு ஆண்டும் டி 20 உலகக் கோப்பை மற்றும் 3 ஆண்டு களுக்கு ஒரு முறை 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐசிசி-யின் புதிய எதிர்கால சுற்றுப்பயண திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது

2023-ம் ஆண்டு முதல் 2028-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் உலகளாவிய ஊடக உரிமை சந்தையில் பிசிசிஐ-க்கு போட்டியை ஏற்படுத்த ஐசிசி முனைவதாக கருதப்படுகிறது.

மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற ஒளிபரப்பாளர்களிடம் இருந்து வருவாயை பகிர்ந்து கொள்ளவும் ஐசிசி திட்டமிடுகிறது. சமீபத்தில் ஐசிசி தலைமை நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது 2023-க்குப் பிந்தைய காலத்திற்கான போட்டிகள் தொடர் கள் திட்டங்கள் ஆலோசிக்கப் பட்டுள்ளது. இதில் புதிய திட்டங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐசிசி-யின் இந்த செயல் விவேகமானதாக இருக் காது என பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மின்னஞ்சல் வாயிலாக ஐசிசி-க்கு பதில் அளித்துள்ளார்.

முக்கியமான 5 விஷயங்களை குறிப்பிட்டு அளித்துள்ள தனது பதிலில், “இந்த கட்டத் தில் 2023-ம் ஆண்டு ஐசிசி நிகழ்வுகள் மற்றும் முன் மொழியப்பட்ட கூடுதல் ஐசிசி நிகழ் வுகளுக்கு பிசிசிஐ ஒப்புக் கொள்ளவோ அல்லது உறுதிப்படுத்தவோ முடியாது என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.

தற்போது பிசிசிஐ தேர்தல் நடைபெற்று வருகிறது. வாரியத்தின் புதிய உறுப்பினர்கள் இந்த விஷயத்தில் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். இரண்டாவதாக சக உறுப்பினர் நாடுகளுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை (இருதரப்பு போட்டி) நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம். 3-வதாக உறுப்பினர் வாரியங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை உள்ளடக்கிய பணிகள் குழு இந்த விவகாரத்தில் கலந்துரையாட வில்லை.

இந்த விஷயத்தில் நடைமுறை விஷயங்கள் ஏதும் பின்பற்றப்படவும் இல்லை. ஐசிசி போட்டிகளை அதிகரிப்பது என்பது (ஒவ்வொரு ஆண்டும் டி 20 உலகக் கோப்பையை நடத்துவது) இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை வெகுவாக பாதிக்கும். மேலும் வீரர்களின் பணிச்சுமை பகுப்பாய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். இதில் ஐசிசி கிரிக்கெட் குழு ஈடுபடவேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x