ரபாடா என்னை ‘ஸ்லெட்ஜ்’ செய்ய முயன்றார்:  புஜாரா 

ரபாடா என்னை ‘ஸ்லெட்ஜ்’ செய்ய முயன்றார்:  புஜாரா 
Updated on
1 min read

புனே, பிடிஐ

தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் கேகிசோ ரபாடா, இந்திய வீரர் புஜாராவின் கவனத்தைத் திருப்பும் முயற்சியாக ஸ்லெட்ஜிங் செய்ததாகவும் ஆனால் தான் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறினார் செடேஷ்வர் புஜாரா.

புஜாரா 0-வில் இருந்த போது கேட்ச் ஒன்று விடப்பட்டதன் வெறுப்பை புஜாரா ஆட்டமிழந்தவுடன் சில வார்த்தைகளை அவர் மீது ஏவி தீர்த்துக் கொண்டார் ரபாடா.

சரி, ரபாடா கூறியது என்ன? என்று புஜாராவிடம் கேட்ட போது, “என் நினைவில் இல்லை, ஆனால் ரபாடா பேட்ஸ்மென்களை நோக்கி சில வார்த்தைகளைப் பிரயோகிக்கக் கூடிய வீரர்தான்.

ஒரு பேட்ஸ்மெனாக ரபாடா என் கவனத்தை திருப்ப முயல்வார் என்பது எனக்கு தெரியும், அவர் மட்டுமல்ல எந்த ஒரு பவுலரும் செய்யக்கூடியதுதான், அவர் ஏதாவது கூறுவார் ஆனால் நான் கண்டுகொள்ளவில்லை.

நாம் நம் வேலையில் கவனமாக இருந்தால் அவர்கள் என்ன கூறுகிறார் என்பது நம் காதுகளில் விழாது. ஆகவே நம் கவனத்தில் நாம் இருந்தால் அவர்கள் கூறுவதை பெரும்பாலும் நாம் கண்டு கொள்ள மாட்டோம்.” என்றார் புஜாரா

இன்று புஜாரா 112 பந்துகளில் 58 ரன்களை 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் எடுத்தார், ரபாடாவிடம்தான் ஆட்டமிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in