

புனே
புனையில் இன்று தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் ஒரு மாற்றமும், தென் ஆப்பிரிக்க அணியில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல்டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரி்க்க அணியை வென்றது இந்திய
இந்த சூழலில் 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று தொடங்குகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியாக நடத்தப்படும் இந்த தொடரில் 120 புள்ளிகளையும் கைப்பற்ற இந்திய அணி தீவிரமாக இருக்கிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒருமாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற வகையில் எந்த மாற்றமும் இல்லை.
அதேபோல தென் ஆப்பிரிக்காவில் சுழற்பந்துவீச்சாளர் பிடெட்டுக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் நார்ட்ஜே சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற வகையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.