

சென்னை: ஐஸ்லாந்தில் நடைபெற்ற டூர்னோய் சாட்டி லைட் வாள்வீச்சுப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்றார்.
ரெய்க்ஜாவிக் நகரில் இப்போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. அரை இறுதிப் போட்டியில் பவானிதேவியும், அமெரிக்காவின் பிரான்செஸ்கோ ரூசோவும் மோதினர். இதில் ரூசோ 15-13 என்ற கணக்கில் பவானிதேவியை வென்றார். இதையடுத்து பவானி தேவிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்தப் பிரிவில் அமெரிக்காவீன் மய்யா சாம்பர்லைன் தங்கமும், ரூசோ வெள்ளியும் வென்றனர். கடந்த வாரம் பெல்ஜியத்தில் நடைபெற்ற டூர்னோய் சாட்டிலைட் வாள்வீச்சுப் போட்டியில் பவானி தேவி வெள்ளியைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிடிஐ