

தோஹா: உலக தடகளப் போட்டியின் மாரத்தான் ஓட்டத்தில் இந்திய வீரர் கோபி தோனக்கல் 21-வது இடம் பிடித்தார்.
இந்தப் போட்டிகள் கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகின்றன.
நேற்று முன்தினம் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கோபி 2 மணி நேரம் 15 நிமிடம் 57 விநாடிகளில் பந்தயத் தூரத்தைக் கடந்தார். சீனாவில் 2017-ல் நடைபெற்ற ஆசிய மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்றவர் கோபி என்பது குறிப்பிடத்தக்கது.
- பிடிஐ