Published : 06 Oct 2019 03:12 PM
Last Updated : 06 Oct 2019 03:12 PM

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிக்சர்கள் சாதனை விசாகப்பட்டிணம் டெஸ்ட்டில் முறியடிப்பு: பாக். சாதனை உடைந்தது

விசாகப்பட்டிணம் டெஸ்ட் போட்டியின் இந்திய வெற்றியில் மொத்தம் 36 சிக்சர்களை இரு அணிகளும் அடித்தது டெஸ்ட் கிரிக்கெட் சிக்சர்கள் வரலாற்றில் புதிய மைல் கல்லாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2014-15 தொடரில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் 35 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே டெஸ்ட் சாதனையாக இருந்து வந்தது.

இன்று விசாகப்பட்டணத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் பியட், ஜடேஜா பந்தில் மிட்விக்கெட் மீது அடித்த சிக்ஸ் 36வது சிக்சராக சாதனை உடைப்புச் சிக்சராக அமைந்தது.

இந்த 36 சிக்சர்களில் இந்திய அணியின் புதிய தொடக்க சிக்சர் மன்னன் ஹிட்மேன் ரோஹித் சர்மா மட்டும் 13 சிக்சர்களை விளாசி வாசிம் அக்ரமின் 12 சிக்சர் சாதனையை உடைத்தது வேறு கதை.

ரோஹித் சர்மா முதல் இன்னிங்சில் 176 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில் 127 ரன்களையும் அடித்து சுனில் கவாஸ்கருக்குப் பிறகு தொடக்க வீரராக டெஸ்ட்டில் இரண்டு சதங்கள் அடித்தார்.

விசாகப்பட்டிணம் டெஸ்ட்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x