

ஞாயிறன்று விசாகப் பட்டிண டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க 5ம் நாள் பிட்சை தென் ஆப்பிரிக்க அணி வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது அதாவது ட்ரா செய்வதே கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது, ஏனெனில் டீன் எல்கர் ஆட்டமிழந்து விட்டார்.
இந்நிலையில் வெர்னன் பிலாண்டர் கூறும்போது, “கடந்த முறை நாங்கள் இங்கு வந்த போது பிட்ச் இன்னும் படுமோசமாகவே இருந்தது. ஆனால் இந்தமுறை இந்தப் பிட்சில் இன்னமும் பேட் செய்ய முடியும். இந்திய பேட்ஸ்மென்கள் இதனை நிரூபித்தனர். என்ன வீரர்கள் களத்தில் நிற்க வேண்டும். 2 வீரர்கள் நின்று சதங்கள் அடிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
நாளை 98 ஓவர்கள் தென் ஆப்பிரிக்கா நிற்க வேண்டும், பிட்ச் நினைப்பது போல் சுலபமானதல்ல, 2வது இன்னிங்ஸ், முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா ஸ்பின்னர்கள் சரியான இடத்தில் பந்துகளை வீசவில்லை. 2வது இன்னிங்ஸ் இன்னும் மோசம். டுபிளெசிஸ் கேப்டன்சியும் எந்த ஒரு அவசரமும் இல்லாமல் மந்தமாக இருந்தது.
மேலும் பிலாண்டர் கூறும்போது, “வேகப்பந்து வீச்சாளர்கள் இரு அணிகளுமே 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளனர். இப்படியும் கூறலாம், அப்படியும் கூறலாம் ஆனால் 3 ஸ்பின்னர்களைத் தேர்வு செய்தது சரியே. இந்திய அணியினர் எங்கள் ஸ்பின்னர்களை நன்றாக ஆடினர், அதற்குரிய பெருமையை அவர்களுக்குச் சேர்ப்பதுதான் முறை” என்றார்.