Published : 05 Oct 2019 05:34 PM
Last Updated : 05 Oct 2019 05:34 PM

வாசிம் அக்ரம் சாதனையை உடைத்த ரோஹித் சர்மா

டெஸ்ட் தொடக்க வீரராக முதன் முதலாகக் களமிறங்கிய டெஸ்ட் போட்டியிலேயே 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா, 23 ஆண்டுகளாக வாசிம் அக்ரம் வைத்திருந்த சாதனை ஒன்றையும் முறியடித்து அசத்தியுள்ளார்.

முதல் இன்னிங்சில் 176 ரன்களைச் சேர்த்த ரோஹித் சர்மா 2வது இன்னிங்சில் 149 பந்துகளில் 127 ரன்களை விளாசி சுனில் கவாஸ்கருக்குப் பிறகு ஒரே டெஸ்ட் போட்டியில் 2 சதங்கள் அடித்த வீரர் என்பதோடு, ஒரு டெஸ்ட்டில் 2 சதங்கள் அடித்த 6வது இந்திய வீரர் என்ற முக்கிய வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 6 சிக்சர்களை விளாசிய ரோஹித் சர்மா 2வது இன்னிங்சில் 7 சிக்சர்களை விளாசி மொத்தம் 13 சிக்சர்கள் என்ற புதிய சாதனையை நிகழ்த்தினார்.

இதற்கு முன்னதாக 1996ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக வாசிம் அக்ரம் ஒரே டெஸ்ட் போட்டியில் 12 சிக்சர்களை அடித்து சாதனை புரிந்திருந்தார்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அந்தச் சாதனையை உடைத்தெறிந்தார் ரோஹித் சர்மா.

இந்திய அணி தன் 2வது இன்னிங்சில் 323/4 என்று டிக்ளேர் செய்தது, தென் ஆப்பிரிக்கா மிக முக்கியமான டீன் எல்கர் விக்கெட்டை இழந்து 11/1 என்று இன்றைய தினத்தை முடித்துள்ளது.

வெற்றி இலக்கு 395 ரன்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x