Published : 04 Oct 2019 05:28 PM
Last Updated : 04 Oct 2019 05:28 PM

டெஸ்ட் போட்டிகளில் மிட்சல் ஜான்ஸன், ஸ்டார்கை முறியடித்து ரவிந்திர ஜடேஜா தனித்துவமான சாதனை

விசாகப்பட்டினம்

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜா டெஸ்ட் இடது கை பந்துவீச்சாளர்களில் மிகவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் புதிய சாதனைப் படைத்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டீன் எல்கர் விக்கெட்டை வீழ்த்தியபோது, ஜடேஜா இந்த சாதனையைச் செய்தார்.

இதன் மூலம் இலங்கை அணியின் இடதுகை சுழற்பந்துவீ்ச்சாளர் ரங்கண்ணா ஹெராத் 47 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆனால், ரவிந்திர ஜடேஜா 44 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அவரை முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான் 49 போட்டிகளில்தான் 200 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மிட்சல் ஸ்டார்க் 50 போட்டிகளிலும், வாசிம் அக்ரம், பிஷன் சிங் பேடி ஆகியோர் 51-வது போட்டிகளில்தான் 200 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால், ஜடேஜா இவர்கள் அனைவரையும் முறியடித்து 44 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிவிட்டார்.

இதன் மூலம் வேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும், வேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இடதுகை பந்துவீச்சாளர் என்ற சிறப்பையும் ஜடேஜா பெற்றுள்ளார்

கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியில் ஜடேஜா களமிறங்கினார். 156 ஒருநாள் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும், 44 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளையும், 44 டி20 போட்டிகளில் 33 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x