முருகப்பா ஹாக்கி: கர்நாடகா-மும்பை ஆட்டம் டிரா

முருகப்பா ஹாக்கி: கர்நாடகா-மும்பை ஆட்டம் டிரா
Updated on
1 min read

சென்னையில் நடைபெற்று வரும் எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நேற்று நடைபெற்ற கர்நாடக ஹாக்கி-மும்பை ஹாக்கி அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

19-வது நிமிடத்தில் மும்பை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அந்த அணியின் ஹர்ஜித் சிங் அதை கோலாக்கினார். ஆனால் இந்த முன்னிலையை அடுத்த நிமிடத்திலேயே தகர்த்தது கர்நாடக அணி. அந்த அணியின் பிம்மன்னா பீல்டு கோல் மூலம் ஸ்கோரை சமன் செய்தார்.

எனினும் விடாப்பிடியாக போராடிய மும்பை 29-வது நிமிடத்தில் 2-1 என முன்னிலை பெற்றது. இந்த கோலையும் அந்த அணியின் ஹர்ஜித் சிங்தான் அடித்தார்.

இதன்பிறகு ஸ்கோரை சமன் செய்ய தொடர்ந்து போராடிய கர்நாடக ஹாக்கி அணிக்கு கடைசி கால் ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் பிம்மன்னா தனது 2-வது கோலை அடித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in