

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பு புறக்கணிக்கப்பட்ட வீரர்களான உமர் அக்மல், அகமது ஷேசாத் ஆகியோர் பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டனர்.
ஷேசாத் சுமார் 16 மாதங்களுக்குப் பிறகும் உமர் அக்மல் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகும் பாகிஸ்தான் அணிக்குத் திரும்பியுள்ளனர். அதே போல் ஃபாஹிம் அஷ்ரப் என்ற ஆல்ரவுண்டரும் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 2018-ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஷேசாத் கடைசியாக டி20யில் ஆடினார், ஆனால் உமர் அக்மல் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு வந்துள்ளார், 2016-ல் பயிற்சியாளர் மிக்கி ஆர்தருடன் சண்டையிட்டதாக 3 போட்டிகளுக்குத் தடையும் ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டார்.
ஆனால் தற்போது மிஸ்பா உல் ஹக் அணித்தேர்வுக்குழு தலைவராகவும் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்ட பிறகு இவர்களது திறமைக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாக். டி20 அணி வருமாறு:
சர்பராஸ் அகமெட் (கேப்டன்), பாபர் ஆஸம் (துணை கேப்டன்), ஷெசாத், ஆசிப் அலி, பாஹிம் அஷ்ரப், ஃபகர் ஜமான், ஹாரிஸ் சோஹைல், இப்திகார் அகமட், இமாத் வாசிம், முகமது ஆமிர், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், ஷதாப் கான், உமர் அக்மல், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ்.