நியூஸிலாந்தில் ரோஹித் சர்மா என்ன செய்கிறார் என்று பார்ப்போம்: ஷான் போலாக்

நியூஸிலாந்தில் ரோஹித் சர்மா என்ன செய்கிறார் என்று பார்ப்போம்: ஷான் போலாக்
Updated on
1 min read

இந்திய மட்டைப்பிட்ச்களில் பந்து வீச புதிதான யோசனைகள் உத்திகள் தென் ஆப்பிரிக்க பவுலர்களுக்குத் தேவை, வழக்கமாக தென் ஆப்பிரிக்காவில் வீசுவது போல் வீசுவது கூடாது என்று கூறிய ஷான் போலாக், ரோஹித் சர்மாவின் தொடக்க வெற்றி இன்னும் கொஞ்சம் தொலைவு போன பிறகுதான் அறுதியிட முடியும் என்ற தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவின் எதிர்காலம் பற்றி ஷான் போலாக் கூறியதாவது:

ரோஹித்தின் டெஸ்ட் வாழ்க்கைப் பற்றி கூற வேண்டுமெனில் இந்தியாவில் அவர் சிறப்பாக ஆடியுள்ளார், ஆடுகிறார். ஆனால் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதுதான் அவருக்கு பெரிய சவால்கள் காத்திருக்கின்றன.

அங்கு செல்லும்போதுதான் அவர் அதற்கான விடைகளை அவர் அளிக்க முடியும். நியூஸிலாந்தில் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு கூறினார் ஷான் போலாக்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in