

விசாகப்பட்டினம்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது.
இந்த ஆட்டத்துக்கான 11 பேர் கொண்ட இந்திய அணி நேற்றே அறிவிக்கப்பட்டது. இதன் படி ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்குகிறார். அதே வேளையில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்துக்கு பதிலாக விருத்திமான் சாஹா விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறுகிய வடிவிலான தொடர் களில் வெற்றிகரமாக ரன் வேட்டையாடி வரும் ரோஹித் சர்மா அதே திறனை பாரம்பரியமிக்க டெஸ்ட் வடிவிலும் பிரதிபலிக்கச் செய்யக்கூடும் என இந்திய அணி நிர்வாகம் வலுவாக நம்புகிறது. எனினும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சோதனை முயற்சியின் முன்னோட்டமாக தொடக்க பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்ட ரோஹித் சர்மா 2 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் டக் அவுட் ஆனார்.
இதனால் தொடக்க நிலை பேட்டிங் என்பது ரோஹித் சர்மாவுக்கு சுய பரிசோதனையாக இருக்கக்கூடும். நடுவரிசை வீரராக ரோஹித் சர்மா இதுவரை 27 டெஸ்டில் விளையாடி 39.62 சராசரியுடன் 1,585 ரன்கள் சேர்த்துள்ளார். 3 சதங்கள், 10 அரை சதங்கள் இதில் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 177 ஆகும். குறுகிய வடிவிலான போட்டிகளில் (ஒருநாள் போட்டி, டி 20) 11,129 ரன்கள் குவித்துள்ள ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது சாதனைகளை மேம்படுத்திக் கொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக் கூடும்.
கேப்டன் விராட் கோலி கூறுகையில், “ரோஹித் சர்மா தொடக்க வீரராக வெற்றிகரமாக செயல்பட்டால் எங்களது டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை எதிரணிக்கு ஆபத்தானதாக இருக்கும். மேலும் எங்களது ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் உலகின் எந்த பகுதியிலும் முழுமையாக மாறுபட்டதாக தெரியும்.
சாஹா உடற்தகுதியுடன் நலமாக இருக்கிறார். அவரின் விக்கெட் கீப்பிங் திறமை அனைவருக்கும் தெரிந்ததுதான். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போ தெல்லாம் பேட்டிங்கிலும் சிறப் பாக செயல்பட்டுள்ளார். என்னை பொறுத்தவரையில் அவர், உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்” என்றார்.
விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 2 முதன்மை சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் சந்திக் கிறது. மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் விளையாடும் லெவ னில் சேர்க்கப்படாத ரவிச்சந் திரன் அஸ்வின் தற்போது விசாகப் பட்டினம் டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் லெவனில் சேர்க்கப் பட்டுள்ளார்.
அவருக்கு உறுதுணையாக வீச 2-வது சுழற்பந்து வீச்சாளராக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட் டுள்ளார். மேலும் ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கும் பட்சத் தில் ஹனுமா விகாரியை 3-வது சுழற்பந்து வீச்சாளராகவும் விராட் கோலி பயன்படுத்திக் கொள்ளக் கூடும். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளது சற்று பின்னடைவுதான். எனினும் இஷாந்த் சர்மா, மொகமது ஷமி ஆகியோரும் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய வர்களாகவே திகழ்கின்றனர்.
டு பிளெஸ்ஸிஸ் தலைமை யிலான தென் ஆப்பிரிக்க அணி புதிய தோற்றத்துடன் களமிறங்கு கிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளை யாடிய போது டெஸ்ட் தொடரை 0-3 என இழந்திருந்தது. அந்த சுற்றுப்பயணத்தில் அணியில் இடம் பெற்றிருந்த 5 வீரர்கள் மட்டுமே தற்போது உள்ளனர்.
பேட்டிங்கை பொறுத்தவரை யில் டு பிளெஸ்ஸிஸ், டீன் எல்கர், குயிண்டன் டி காக், எய்டன் மார்க்ரம், தெம்பா பவுமா ஆகியோர் சவால் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப் பந்து வீச்சில் மூவர் கூட்டணியான காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, பிலாண்டர் ஆகியோர் இந்திய பேட் டிங் வரிசையை கடும் சோதனைக்கு உட்படுத்த தயாராக உள்ளது.
போட்டியின் 5 நாட்களிலும் மழை குறுக்கிட வாய்ப்புகள் உள்ள தால், குளிர்ந்த வானிலை தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் களுக்கு சாதகமாக இருக்கக்கூடும். இதனால் சொந்த நாட்டில் தொடர்ச்சியாக 11-வது முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி சற்று எச்சரிக்கையுடன் விளையாடுவதில் முனைப்பு காட்டுவது அவசியம்.
அணிகள் விவரம்
இந்தியா லெவன்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விகாரி, விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, மொகமது ஷமி, இஷாந்த் சர்மா.
தென் ஆப்பிரிக்கா: டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டீன் எல்கர், தெம்பா பவுமா, தியூனிஸ் டி புரூயின், குயிண்டன் டி காக், ஜுபைர் ஹம்சா, செனுரன் முத்துசாமி, ரூடி செகன்ட், டேன் பியட், கேசவ் மகாராஜ், லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெர்னான் பிலாண்டர், காகிசோ ரபாடா.22 மாதங்களுக்குப் பிறகு
விருத்திமான் சாஹா சர்வதேச டெஸ்ட் போட்டியில் 22 மாதங்களுக்குப் பிறகு களமிறங்குகிறார். கடைசியாக அவர், 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் கேப்டவுனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கினார். 34 வயதான சாஹா 32 டெஸ்டில் பங்கேற்று 3 சதங்கள், 5 அரை சதங்களுடன் 1164 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 30.63.நேரம்: காலை 9.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்