

புதுடெல்லி
காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சு முறை மாறாது என்று அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாள ரான ஜஸ்பிரீத் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி யுள்ளார். அவரது காயம் குண மடைய குறைந்தது 8 வாரங்கள் ஆகும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், பும்ரா குறித்து செய்தி நிறுவனத்துக்கு நெஹ்ரா அளித்த பேட்டி:
இந்திய அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக மட்டுமல்லாமல் உலக அளவிலேயே சிறந்த வீரராக பும்ரா உள்ளார். முதுகில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரது பந்துவீச்சு ஸ்டைல் (முறை) மாறாது. காயத் துக்கும் அவரது பந்துவீச்சு ஸ்டை லுக்கும் சம்பந்தமில்லை. இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். காயத்தால் தனது பந்துவீச்சு ஸ்டைலையும் அவர் மாற்றிக் கொள்ள வேண் டிய அவசியம் இல்லை. அவர் மீண்டும் வலுவாக வருவார், மேலும் அவரது பந்துகளில் வேகம் அப்படியே இருக்கும் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.
அவரது காயம் எந்தவகைப் பட்டது, எத்தனை நாளில் குண மாகும் என்று சொல்ல முடியாது. அடுத்த 2 மாதங்களில் அவர் குணமடைவார் என எதிர்பார்க் கிறேன்.
அவர் ஏராளமான போட்டிகளில் விளையாட வேண்டும். அவருக்கு இப்போதுதான் 25 வயதாகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை அவர் கடந்த 3 ஆண்டுகளாகதான் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருடைய உடல்நிலையை அவர் நன்கு அறிவார். அவர் வலுவான வீரராக மீண்டு வருவார். இவ்வாறு நெஹ்ரா கூறினார். - பிடிஐ